sachchin 10dulkar

அனைவருக்கும் வணக்கம்..

கிருஸ்தவ அன்பர்களுக்கு இனிய கிருஸ்த்மஸ் வாழ்த்துக்கள்.... !!
---------------------------------------------------------------------------------

சச்சின் ரிடையர் ஆகவேண்டுமென ஓராண்டிற்கும் மேலாக எதிர்பாத்த ரசிகர்களுள்(!)  நானும் ஒருவன். தற்சமயம் அவர் ஒடிஐ விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார்.. .இதோ அதுபற்றி மனதில் தோன்றியவை..

1) 'மாயன்' ஏமாற்றிவிட்டார்... உலகம் அழியவில்லை. வேற வழியே இல்லை. நானும் 'ஓய்வு' பெறவேண்டியதுதான்..   (வேற வழியே இல்ல போல.)-- சச்சின்

2) சச்சின், சிக்ஸ் அடிச்சு பாத்ருப்ப..., ஃபோர் அடிச்ச் பாத்ருப்ப.., செஞ்சுரி அடிச்சு பாத்ருப்ப.. ஏன் அவுட் ஆகியும் பாத்ருப்ப... ஆனா அவரு 'ரிடையர்' ஆனதா பாத்ருப்பையா, பாத்ருப்பையா பாத்ருப்பையா.. . (இதோ  பாரு. இப்பப் பாரு...  ..) --

3) கிரிக்கேட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு..
    அப்போ (previously) :  சச்சின் சிக்சர். சச்சின் சிக்சர்..
    இப்போ (recent days)   : சச்சின் ரிடையர்.. சச்சின் ரிடையர்...

4) சச்சின் : எப்டி இருந்த நா இப்படி ஆயிட்டேன் ?

5) 1998ம் வருடம் ஏப்ரல் மாதம்... ஷார்ஜா. (sachchin batting with 80+, previously scored 20 centuries on ODI)
    "The whole world is looking for 21st Century"
  2011ம் வருடம்.... உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் :
   "Sachin's Dream comes true.. He might retire anytime now"

பதிவர்கள் சந்திப்பு 26-08-2012

சென்னையில் பல பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பிருந்தும், என் ஒருவனை சந்திப்பதற்காக இன்று எனது இல்லத்திருக்கு விஜயம் செய்த அண்ணன் பெசொவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. 

--------  எப்படியோ, இந்த வகையில நாமளும் இன்னைய (26-08-2012) பதிவர்(கள்)   சந்திப்புல கலந்திட்டோமில்ல.  ## இன்றைய செய்தி நாளைய வரலாறு.. ..

ஒபாமாவிற்கு நெத்தியடி !

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு நெற்றியில் அடி விழுந்தது. பெரிய அளவில் காயம் ஏற்படாவிட்டாலும், ஒரு நாட்டின்.. அதுவும் வல்லரசு நாட்டின் அதிபர் ஒருவரை  நெற்றியில் அடிக்கும் அளவிற்கு துணிச்சல் யாருக்காவது வருமா.. ?

அடித்தவர் யார் என்பதை காண ஆவலா .... இதோ.... கீழே வண்ணப் படத்தில் பார்க்கலாம்..

.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................

.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................
.................



அடித்தவர் : ஒன்பது மாதமே ஆன கோல்  நெல்சன், அதிபரின் லோவா மாகான விஜயத்தில்.

டிஸ்கி : வண்ணப் பட உதவி  ஐ.பி.என்.லைவ் டாட் இன்  டாட் காம் கேலரி.

கதம்பம் - June 15 2012

ரொம்ப நாளா பதிவே எழுதல....
சில சமயத்துல எண்ணங்கள் தோணினாலும் இங்க பதிவா எழுத சோம்பல்.. (எழுதி என்ன ஆகப் போறதுன்னு சலிப்பு) .

வளவளனு எழுதாம பாயிண்டு பாயிண்டா எழுதினா படிக்கறதுக்கு சலிப்பு வராதுதான.. இப்ப பாயிண்டு பாயிண்டா படிங்க..

1) குடும்பத்தோட சொந்த ஊருக்கு போயி ரெண்டு வாரம் இருந்துட்டு வந்தேன் (ஜூன்ல) ..
2) இங்க வீட்டுல நாலு சுவத்துக்குள்ள குளிக்கறத்துக்கும், சொந்த ஊருல பரந்து விரிந்த ஹரித்ராநதி குளத்துல குளிக்கறதுக்கும், எவ்ளோ வித்தியாசம் ! என்னோட பசங்க நல்லா என்ஜாய் பண்ணாங்க குளக்குளியல !!
3) எங்க ஊருல அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி பெரிய கோவில் பிரசத்தி. கோவிலுக்கு தினமும் போயி தரிசனம் செய்தேன்.
4) அதுல ஒரு நாள், 'கருட சேவை'... வைகாசி விசாகம் / பவுர்ணமி அன்னைக்கு.
5) தொண்ணூறு ஆரம்பத்தில் சென்னை தொலைக்காட்சியில் வந்த 'என் இனிய இயந்திரா' தொடர்ல ஒவ்வொரு பிரஜைக்கும் பேரு கெடையாது.. ஆல்ஃபா நியூமரிக் கோட்  தான். அந்த வகையில பேரோட(Name) பன்னெண்டிலக்க எண்கொண்ட அடையாள மற்றும் முகவரி அட்தாச்சி அட்டைதான் 'ஆதார்'.
      ஹையா.. எனக்கு ஆதார் (Aadhaar) அடையாள அட்டை வந்துடிச்சு..
6) சின்ன வயசில (ஆறாம் வகுப்பு படிச்சேன்னு நெனைக்கிறேன்), குரங்கு பெடல் அடிச்சு அடிச்சு, ஓட்ட கத்துக்கிட்ட சைக்கிள்(சைக்கிளோட மிச்ச சொச்சம்) இன்னைக்கும் எங்க வீட்டுல இருக்கு.. ஊருக்கு போனப்ப அதப் பாத்ததும் படும் பிடிச்சிட்டேன்..

டிஸ்கி : இந்தப் பதிவு ஜூன் மாசம் எழுதி ட்ராஃப்ட்ல வெச்சிருந்தது.... வெளியிட மறந்திட்டேன் இதோ இப்ப வெளியிடுறேன் 

நெஞ்சு பொறுக்கு தில்லையே..!!

I am highlighting this for 'awareness' so as to prevent such accidents/incidents

In continuation to my previous post, published yesterday.......

From (courtesy)..  http://articles.timesofindia.indiatimes.com/2012-06-22/gurgaon/32367680_1_borewells-cgwa-pit

=========== copied mesg starts here ===========
More such incidents might be waiting to happen with barely any data on abandoned and illegal borewells in the district available with the administration.
Also, the incident in Khoh village near Manesar could have been averted if there was little precaution taken at the site. The pit was dug up illegally for a boring well but since there was no water available even as deep as 70 feet, the pit was abandoned for digging a fresh one.
This pit was covered casually with a boulder but the owner or tenants never made an attempt to fill it. On Wednesday night, Nitin Upadhayay had made arrangements for a small function to celebrate Mahi's fourth birthday.

According to neighbours, a tempo carrying speakers for the DJ system got stuck near the entrance as its tyre got caught in the boulder. In a bid to manoeuvre the vehicle, the boulder was removed and never put back in place, said eyewitnesses.

The owner of this building, Rohtash Tayal, is a resident of Najafgarh. He had asked for digging of this borewell recently but the pit (dug just at the entrance to the building) had to be abandoned when they could not reach groundwater.

========= copied mesg ends here===================



Is this called 'FATE' or our 'FOOLISHNESS' ?
Madhavan S

'பாதுகாப்பு' - எப்பவுமே இப்படித்தானா ?

எதைச் செஞ்சாலும் 'பாதுகாப்பு' இருக்குதான்னு நல்லா கவனாமா பாத்துச் செய்யணும்.

நம்ம நாட்ல பொது மற்றும் தனியார் இடத்துல ஆழமா குழிய வெட்டிட்டு அதனால மக்களுக்கு உயிர் போற அளவுக்கு ஆபத்தா விட்டுடுறது என்ன நியாயம் ?

எழுபதடி ஆழ குழில விழுந்து நாப்பது மணி நேரமானாலும் இதுவரை மீட்கப் படாத நாலு வயசு குழந்தை  'மாஹி உபாத்யாய' நல்ல படியாக உயிருடன் மீட்கப்பட பிரார்த்தனை கூட்டுப் செய்வோம். கூட்டுப் பிரார்த்தனையில் வலிமை மிகவும் பெரியது..

இதுபோன்ற அசம்பாவிதம் இனி நடக்கா வண்ணம் ஒவ்வொரு மனிதனும் உணரவும் மேற்படி பிரார்த்திப்போம்..

Ref :  http://ibnlive.in.com/news/45-hours-on-time-runs-out-for-child-in-borewell/267394-3.html

IRCTC -- என் மனதில் தோன்றியவை.

ஐ.ஆர்.சி.டி.சி  மூலம் இன்டர்நெட்டில் இந்திய ரயில் முன்பதிவு செய்பவர்களுள் நானும் ஒருவன். ஆறேழு வருடங்களாகவே அந்த வசதியை பெற்று வருகிறேன். தற்போது அதிக நபர்கள் இன்டர்நெட் முறையில் முன்பதிவு செய்து வருதாதால் பயன்பாட்டு முறைக்கு அந்த சர்வர் அடிக்கடி அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. முக்கியமாக காலை எட்டு மணிபோல அதனுள் நுழையவே முடியவில்லை. 

நூறு கோடிக்கணக்கில் மக்கள் இருக்கும் நாட்டில் இதுபோன்ற சேவைகளை எவ்வளவு கஷ்டத்தில் லாகவமாக செய்ய முயற்சிக்கு பாராட்டுக்கள். எனினும் ஒன்றிரண்டு குறைபாடுகள். எங்கு இது பற்றி எழுதினால் சரி செய்வார்கள்.

உதாரணம் 1  : பயணியர்கள் மாஸ்டர் லிஸ்டில் பெயர் சேர்க்கும் பொது பிறந்த தேதி தகவலும் சேர்க்கப் படுகிறது. அந்த லிஸ்டின்படி நபர்களை சேர்த்தால் அவர்களின் வயதும் கணக்கிடப் பட்டு வருகிறது. ஆனால் அந்த கணக்கு முறை பயணமுன்பதிவு செய்யும் தேதியின்படி இருக்கிறது. பயணத் தேதி முறையின்படிதான இருக்க வேண்டும் ?

உதாரணம் 2  : மாஸ்டர் லிஸ்டில் முதல் முறையில் ஒரு நபரை சேர்க்கும் பொது கடைசியில், பிறந்த தேதி கொடுத்தபின்னும் சீனியர் சிடிசன் வாய்ப்பு வேண்டுமா வேண்டாமா எனக் கேட்கப் படுகிறது. ஒருவருக்கு வயது 20  மட்டுமே ஆகி இருந்தாலும் இப்படி ஒரு கடைசி (சீனியர் சிட்டிசன்) கேள்வி தேவையா ?  அதாவது, பிறந்த தேதிப்படி வயதினை கணக்கிட்டு.. விதிமுறையின்படி சீனியர் சிட்டிசன் வயதினைத் தாண்டியவர்களின் சேர்க்கைக்கு மட்டும் இந்த கேள்வி கேட்கப் படலாமே !!

அல்லது முதல் முறையில் வயது நேரடியாக கணக்கிடப் படாமல் இருந்தால்... இந்த ஆப்ஷனை பின்னர் முன்பதிவு செய்யும் பொது வயதிற்கேற்றபடி கேட்கப் படலாமே !!

எனினும் இந்திய ரயில்வேக்கு பாராட்டுக்கள்.. நன்றிகள் அவர்களின் சேவைக்கு.  

பயண அனுபவம்...

முன்னுரை :
ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு.. நா பதிவு எழுதி. சில சமயங்கள்ல சில ஐடியா கெடைச்சாலும்.. அத நோட் பண்ணிட்டு இங்க பதிவா எழுதுறதுக்கு அந்தளவுக்கு ஆர்வம் இல்ல. இருந்தாலும் வழக்கா நான் தொடரும் வலைப் பூ பதிவுகள படிச்சிட்டு வர்றேன். 

முகப் புத்தகம் ஷார்ட்டா இருக்குறதால அங்க ஓரளவுக்கு கமெண்டு போட்டுட்டு வர்றேன். 

சமீபத்துல மும்பை போயிட்டு வந்தேன்.. அந்தப் பயணத்துல நடந்த ஒருசில அனுபவங்கள இங்க சொல்லுறேன்.   

மெயின் மேட்டர் :

பதிமூணு வருஷத்துக்கு அப்புறம் சந்திச்ச ரெண்டு நபர்...  --- அந்த ரெண்டு பெரும் நா அஹமாதாபாத்ல வேலை செஞ்சப்ப என்னோட அலுவலகத்துல குறைந்த கால நேரத்துல வேலை செஞ்சவங்க.. ஒருவர் அங்க இருக்கார்னு தெரிஞ்சு நானே சென்று அவர சந்திச்சேன்.. மற்றவரோட சந்திப்பு நூறு சதவிகிதம் எதிர்பாராதது.. ரெண்டு மணி நேரம் ஜாலியா பழைய நினைவுகள பகிர்ந்துகிட்டோம்.....  பசுமை நினைவுகள்.

இதுவரைக்கும் செக்கின் கவுன்ட்டர்லதான் போர்டிங் பாஸ் பாங்கி இருக்கேன். இந்தக் தடைவை ஒரு சேஞ்சுக்கு நேரடியா கயாஸ்க் (kyosk) மெஷின்ல செக்கின் பண்ணலாம்னு ஒரு ட்ரை(என்கிட்டே செக்கின் லக்கேஜ் இல்லாததால)..

டச் ஸ்க்ரீன் மெஷின். முதல்ல பி.என்.ஆர் நம்பர்.. அப்புறம் முதல் பெயர்.. இரண்டாம் பெயர்.. இதுல ஒரு சங்கடம்.. பெரும்பாலும் நா என்னோட பெயர S Madhavan ன்னு பயன் படுத்துவேன். இதுல எது முதல் பெயர்.. எது இரண்டாம் பெயர்னு சந்தேகம் வரும். ஏன்னா, ஆபீஸ் டிராவல் செக்ஷனால் எத மோதபெயரா கொடுக்கரான்களோ எனக்குத் தெரியாது. நாமளும் துணைப் பெயர் வைச்சிருந்தா இந்த பிரச்சனை இருக்காது போல. எப்படியோ இந்த பாகத்தையும் ஒரு Guessல   கடந்து.. அப்புறம் 'எங்கிருந்து' ... 'செல்லவேண்டிய இடம்' -- இதலாம் கேட்டபடி சொல்லி.. இருக்கையைக் கூட செலெக்ட் பண்ணி கடைசியில ஏதோ அது கேக்க.. அதப் படிக்காம 'எஸ்' ன்னு தட்ட.. 'sorry, your boarding pass cannot be proccessed you are denied to board' ன்னு வந்திச்சு.. 

இதென்னடா மன்னார்குடி மாதவனுக்கு வந்த சோதனைன்னு திரும்பவும் அதே டிரை ...   ஆனா இந்தத் முறை கவனமா.. கடைசி கட்டத்துல சரியா படிச்சுப் பாத்தா.. அதுல இந்த மாதிரி இருந்திச்சு..
"நீங்கள் கீழ் கண்ட பொருட்களில் ஏதாவது உங்கள் கேபின் பேகேஜில் எடுத்துச் செல்கிறீர்களா ?", எனக் கேள்வி. இருந்த படங்கள்.. கத்தி, துப்பாக்கி, வெடிபொருள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள். சரியா படிச்சுப் பாக்காததுனால.. படத்தக் கூட பாக்காம, ஆல்வேஸ் பாசிடிவ் திங்கிங் இருந்ததால நானும் எதார்த்தமா 'எஸ்'ன்னு சொல்லி இருக்கேன்... அதான் எனக்கு மொத தடவ போர்டிங் பாஸ் தரல அந்த 'இடியட் பாக்ஸ்'(கம்பியூட்டர்). இடியட் பாக்ஸ் எப்படி சரியா வேலை செய்யுது பாருங்க.. ஆறறிவு படைச்ச மனுஷன் தான் (நானேதான்) சரியா படிக்காம எடக்கு மடக்கா பதில் சொல்லிட்டு.. நெனச்சது நடக்கலன்னு ஒரு பொலம்பல் வேற..
வெயிடிங் லவுன்ஜ்ல நாலு இலவச இன்டர்நெட் பிரவுசர் வெச்சிருந்தாங்க.. அந்த நாலு மானிடர்ளையும் ஒரு சமயத்துல 'முகப்புத்தகம்' தெரிஞ்சது... நானும் என்னோட தரன் வந்தப்ப 'முகப் புத்தகம், ஜி-மெயில், ப்ளாக்' மூனையும் ஒரு எட்டு பாத்திட்டு போர்டிங் கேட்டுக்கு(gate) போனேன். 

பிளைட்டுல பயணம் செஞ்சப்ப, என்டேர்டைன்மேன்ட்ல சானல் ஒண்ணுல 'டர்டி-பிக்சர்' ஓடிட்டு இருந்திச்சு..  இன்னைக்கு(22-04-2012) சோனி சானல்ல இந்தப் படம் போடுறதா இருந்தாங்க.. இருந்தாலும் ஒலிபரப்புத் துறையின் ஆணையால் இந்தப் படத்த ராத்திரி பதினோரு மணிக்கு மேலத்தான் போடணும்னு சொன்னதால.. அந்தப் படத்தை சுத்தமா தூக்கிட்டு, 'த்ரீ இடியட்ஸ்' ஓடுது அதே சானல்ல, அதே டயத்துல.

முடிவுரை..  :
எரோப்லேணுல 'Dirty Picture' screening தடையில்ல போல... .... சின்னத்திரையில தடை...  என்ன லாஜிக்.. புரியல !

பதில் ப்ளீஸ்..

நாங்கல்லாம் சின்ன வயசில அம்பாசிடர் கார் தான் பெரும்பாலும் பாத்திருக்கோம். அதுக்கு அடுத்த படியா பிரீமியர் பத்மினி (பியட்). பியட்ல எனக்குத் தெரிஞ்சவரை ஒரே ஒரு மாடல் தான். ஆனா அம்பாசிடர்ல மூணு வகை.

முன்னால ஹெட்-லைட்டுக்கு கீழ சின்னதா இன்னொரு லைட்டு படுக்கைவசத்துல கிட்டத்தட்ட ஓவல்ஷேப்ல இருந்தா அது ஒரு வகை, 'Mark-II'. அந்த லைட்டு வட்டமா இருந்தா 'Mark-III'. சதுரமா இருந்த 'Mark-IV'. 

எனக்கு இத என்னோட கசின் சொல்லிக் கொடுத்தான். இதப் பத்தி தெரியாத நண்பர்கள் கிட்ட காரோட முன் பக்கத்தைப் பாத்தே அதுக்கு எத்தன Markனு சொல்லி சொல்லி அசத்துவோம்.

அது ஏன் 'Mark-I' ஒன்னு இல்லேன்னு தெரியல..! உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க.. 

இப்பலாம் நூத்துக் கணக்கான வகையில கார்கள்... ஒரே கம்பெனிகூட பல வகை கார்கள் அறிமுகப் படுத்துகிறது. நம்மளால வித்தியாசம் கண்டு பிடிக்க முடியல. இன்ட்ரெஸ்ட் இல்லை. ஆனா நம்ம பையன் இதச் சின்ன வயசில ஸ்கூல் நண்பர்கள் மூலமா பல கார்களைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு.. காரைப் பாத்த  உடனே என்ன மாடல், என்ன கம்பெனி எல்லாமும் சொல்லிடுறான். இருந்தாலும் அவன் ஒரு கேள்வி கேட்டான் பாருங்க....

பையன் (என்னிடம்) : அப்பா ஒரு ரூமுக்கு எத்தன ஏ.சி(Air Condition) வேணும் ?
நான் : அது அந்த ரூமோட சைசப் பொறுத்தது. பெட்ரூமுக்கு ஒரே ஒரு ஏ.சி போதும்.
பையன் : கார் சைஸ் பெட்ரூமவிட  சின்னதுதான.. அதுக்கு ஏன் ஒரே ஒரு ஏ.சி போதாது ?
நான் : என்னடா சொல்ல வர்ற ?
பையன் : அங்க பாருப்பா அந்தக் காருக்கு எத்தன ஏ.சி.ன்னு பாருப்பா..!
அவன் காண்பித்ததை பார்த்தேன் அதில் எழுதி இருந்தது இதான்... ..
Maruti
 800  A.C.
--------------------------------------------------------------------------

பள்ளிக்கூட நாட்கள் அனுபவம்


பர்ஸ்டு எடுத்த ஒடனே, எங்க தெருக் கோடில இருக்குற ஆரம்ப பள்ளியில தமிழ் வழிக் கல்விதான், நா ஸ்கூல் சேந்தது ஒன்னாப்பு கிளாஸ்லதான். நோ கே.ஜி. எட்செட்ரா.... ஆறு வயசுக்கப்புறமும் சேத்தாலும், ஸ்கூல் போக அழுவேணாம்(அழுவேன் நான்). பக்கத்து வீடு அங்கிள் என்ன மரக் குச்சியால அடிச்சு அடிச்சு வெரட்டி அனுப்பினது இன்னைக்கும் வலியோட ஞாபகம் இருக்கு. அப்பா தெரியாது.. சைல்ட் அப்யூஸ்ல அவர் மேல கேஸ் போடலாம்னு.. என்னதான் இருந்தாலும்... அடிச்சு அடிச்சு வெரட்டினது தப்புத்தான..? சரி போனா போவட்டும் அந்தாளு பொழச்சு போவட்டும். 

ரெண்டாம் கிளாஸ் படிச்சப்ப... அழுவாம ஸ்கூல் போக ஆரம்பிச்சேணாம்.  அந்த வருஷம் ஒரு நாள்.. சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும் பொது.. தெருவுல போயிட்டு இருந்த ஒரு மாட்டு வண்டிக்கு பின்னாடியே மெதுவா போயிட்டு இருந்தேன். அந்த கூடு கட்டின மாட்டு வண்டியில உக்காந்திருந்த பெரியவரு என்னையப் பாத்து கேட்டார் பாரு ஒரு கேள்வி.... படக்குன்னு பதில் சொல்லிட்டேன் நானு. உடனே அவரு பத்து காசு எனக்கு பரிசா தந்தாரு. வாழ்க்கையில எனக்கு சொந்தமில்லாத ஒருத்தரு தந்த மொதொப் பரிசு.. அது. அவரு கேட்ட கேள்வி 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்'. அது 1979 -80 துல அதோட மதிப்பு இன்னைக்கு இருக்குற பத்து ரூபாய்க்கும் மேல இருக்கும்னு நெனைக்கிறேன்.

மூனாம்கிலாஸ் படிச்சப்பத்தான் ஆங்கிலம் ஆரம்பம். எங்கண்ணன் எனக்கு என் பெயர ஆங்கிலத்துல எழுத சொல்லிக் கொடுத்தாரு. அப்புறம்தான் எங்க கிளாசில எ.பீ.சி.டி எ நடத்தினாங்க. நல்லா பயிற்சி கொடுத்துட்டு ஒருநாள் எல்லாரையும் பாக்காம எ.பீ.சி.டி எதுதச் சொல்லி சரியா எழுதினா அவங்களுக்கு அவங்களோட பெயர ஆங்கிலத்துல எழுதச் சொல்லித் தர்றதா டீச்சரம்மா சொன்னாங்க. எனக்கு அத சரியா எழுதத் தெரியல.. எப்படியோ பிரண்டோட உதவியால, விட்டுப் போன நாலஞ்சு ஃஆல்பபெட்ட  காப்பி அடிச்சிட்டு.. கீழ என்னோட பெயர, நானே ஆங்கிலத்துல எழுதிட்டுப் போயி டீச்சர்கிட்ட சிலேட்டக் கொடுத்தேன். என்னோட பெயர எழுதி யுந்ததப் பாத்திட்டு என்ன ரொம்பவே பாராட்டினாங்க.. அண்ணன் சொல்லிக் கொடுத்ததா சொன்னேனே தவிர அந்த ஆல்பபெட் காப்பி மேட்டர சொல்லலியே...

நாலாங்கிளாஸ் படிச்சப்ப கிளாஸ் டீச்சர் (வகுப்பாசிரியர்) பெயர் 'நடன சார்'.  நடராஜன் அவரோட பேரு. தப்பு செஞ்சா தொடையில அடிப்பாரு . வேறேதும் ஞாபகம் இல்ல.

அஞ்சாம் கிளாஸ்ல சுந்தர ராவ், வகுப்பாசிரியர். அவர் தான் ஸ்கூல் ஹெட் மாஸ்டர். ரொம்ப  ஃசாப்ட். கதைலாம் சொல்லுவாரு. சாவியில ரெண்டு வகை இருக்கு. ஆண் சாவி & பெண்சாவி. உங்களுக்கு தெரியுமா ? அவரு சொல்லித்தான் எனக்குத் தெரியும். குழவி கொட்டினால் அதோட கொடுக்கு ஸ்கின்னுக்குள்ள இருக்குமாம். பெண்சாவி யூஸ் பண்ணி அந்த கொடுக்க வெளிய லாவகமா எடுத்திடலாமாம். அஞ்சாம் க்ளாஸ்லையே எம்.பி.பீ.எஸ் ரேஞ்சுக்கு படிச்சவங்க நாங்க.. ஆண்சாவி முனையில மூடி இருக்கும். பெண்சாவி முனையில உல் பக்கமா குழிவா இருக்கும். இப்பலாம் கம்பியூட்டர் கனெக்ஷன் ஒயர்ல மேல் பின், ஃபீமேல் பின் அப்படிலாம் சொல்லுற மாதிரி.

இதுவரைக்கும் குழைத்தனமா செஞ்சதுனால, சொன்னதுனால படிக்குறதுக்கு நல்லா(!) இருந்திருக்கலாம்.. நீங்க அடிக்க வர மாட்டீங்க. அதனால ஆறாம் வகுப்புலேருந்து நா அடிச்ச லூட்டியலாம்சொல்லி உங்கள போரடிக்காம.. விட்டுடுறேன்.

சாராம்சம் :
  1. ஆரம்பக் கல்வி தமிழ் மீடியம்.
  2. இரண்டாம் நிலையிலிருந்து ஆங்கில மீடியம். 
  3. 1C, 2A, 3A, 4A, 5A, 6D, 7 to 12  - A section.  ஆக பெரும்பாலும் 'எ' கிளாஸ்ல படிச்சவனாக்கும் நானு.
-----------------------------------------------------
டிஸ்கி : டீச்சரம்மா நீங்க சொன்ன ஹோம் வோர்க்கு செஞ்சிட்டேன். இது போதுமா.. இன்னும் வேணுமா ?

மாத்தி யோசி.. வெளையாடு

சின்ன வயசில, எங்க வீட்ல கேரம் போர்ட்  & காயின்ஸ் கெடையாது.. பிரண்டு கொடுத்த ஒரே ஒரு ஸ்டைக்கர்  மட்டும் இருந்திச்சு. வீட்டு ஹால்ல தரையில சதுரமா ஒரு டிசைன் இருக்கும் ... சிவப்பு (1) கருப்பு (9) வெள்ளை (9) கலருல சோடா மூடி சேகரிச்சு நாங்க சோடாமூடிகள நடுவுல அடுக்கிவெச்சு (கேரம் போர்டு மாதிரி) ஸ்டைக்கரால  அடிச்சு சதுரத்துக்கு வெளியில தள்ளணும். அப்படி தள்ளி விட்டு காயின கலெக்ட் பண்ணி ஆடுவோம்.

கீழ இருக்குற படங்கள பாத்த ஒடனே அதுதான் ஞாபகம் வந்திச்சு.. ஏழைக்கேத்த எள்ளுருண்டை..  ஆமாம்..

இருந்தாலும் என்னதொரு கிரியேடிவிட்டி.., எங்க சோடாமூடி கேரம்போர்டையும் சேத்துத்தான்.. 



இ -மெயிலில் இன்று :

ஒரு மாறுதலுக்காக ஸ்பேம் மெயில் ஓபன் செய்து பார்த்தேன்.. அடேங்கப்பா.. 24  மணி நேரத்துல ..  என்னைய கோடீஸ்வரன் ஆக்கிட்டுதான் மறுவேலைன்னு  நாலு மெயிலு இருந்திச்சு...

1) Hello Dear Friend,

I am Colonel Brian D. Kent American Combat Soldier group of 50,000, 00 combatant, left behind in Iraq for advisory and assistance to Iraqi Forces after the Handing over to Iraq Peace Keeping Force. During my services, i was able to secure Three Million Five Hundred Thousand Dollar($3.5 million U.S Dollars) which is my own share of the money we shared among ourselves that belongs to Saddam Hussein and his family. I have carefully arrange the said fund in a military consignment trunk box.


Could you be trusted? Can You help me keep this box till I am back from the Camp in Baghdad Iraq in March. 2012, Since Our Final
 Troops is leaving Iraq 2012 March, could you be trusted? kindly send me your name and mobile number for easy communication. I will only highlight you more on this issue when i hear from you.

அந்த மூணாவது மெயில இந்தாளுக்கு பார்வேர்ட் பண்ணனும் போல.. (டவுட்டு கேக்குறான் பாரு..)

2) Dear Lucky Winner,

Your Email ID was selected online in this week's HEINEKEN PREMIUM
EMAIL LOTTERY/AWARD 2012

Your ID has a total sum of 1,000,000.00 GBP (One Million Great Britain Pounds)

இதை நம்ம ரூபாயில சொன்னா எத்தன சைபர் இருக்கும் ?
நம்ம இ-மெயில் அட்ரஸ்க்கு எவ்ளோ மதிப்பு  பாத்தீங்களா.. ?

3) DEAR SIR,

MY NAME IS MR. SMITH HARRISON

I got your esteemed contact during my comprehensive search for a
reliable and trustworthy individual in your country . I am a medical doctor working with NATO currently in Libya. I have some money I made in made from Late President Muammar Gaddafi s compound. I have kept it as secret for a little while and I need someone I can trust and work with to enable me transfer the fund to his/her account for partnership in investment. Please I will need your help on this for I can forfeit 20 present of this money to make

I will be reviling the said amount immediately you give me with your word of
confidence to go ahead for this is a very huge amount of money..........


எலேய்.. இன்னுமா என்ன இந்த உலகம் நம்புது ?

4)

Bank of America


Online Banking Alert







Security Checkpoint:

Remember: Always look for your SiteKey® before entering your Passcode.






Due to concerns, for the safety and integrity of your online account we have issued this warning message. It has come to our attention that your account information needs to be updated due to inactive members, frauds and spoof reports.


We ask you to visit the following link to start the procedure of confirmation on customers data.

To get started, please click HERE.


----------------------------
எனக்கு புரியாத ஒரே ஒரு விஷயம்... 'எவன்டா அவன்.. என் பேருல பேங்க் ஆஃப் அமேரிக்கா'ல அக்கவுன்ட் வெச்சிருக்கறது..? மொதல்ல எனக்கு பாஸ்வேர்டச் சொல்லுங்க ப்ளீஸ்..

டிஸ்கி : நா கோடீஸ்வரன் ஆகணும்னா எதுக்கு இவ்ளோ மெயில்... சன் டி.வி, விஜய் டிவி கோடீஸ்வரன் நிகழ்ச்சில கலந்துக்கிட்டா போதுமே..

கதம்பம்..

 ஜஸ்ட்.. மனசுல தோணின மேட்டர்ஸ்..

முதல்ல ஒரு கேள்வி : டிராஃபிக் சிக்னல்ல டிஜிடல் கவுன்ட் டவுன் பாத்திருப்பீங்க.. எங்க ஊருல ஒரு சிக்னல்ல.. கவுன்ட் டவுன் இப்படி போகுது.. உங்களுக்கு புரியுதா 
53, 43, 33, 23, 13, 03, 92, 82, 72, 62, 52 .........50, 40, 30, 20, 10, 00

எப்படியோ ஜீரோ வந்தாப் போதும்... வழி கெடைக்கும்..  ஆனா விடை ?
-----------------------------------------------

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுல சொதப்பிட்டு இருக்கிற இந்த நேரத்துல இந்திய ஆடவர்  ஹாக்கி டீம் நேத்தைக்கு ஜெயிச்சு.. ஒலிம்பிக் போட்டியில கலந்துக்க  தகுதி பெற்றாங்க.. இனியாவது கிரிக்கெட் மோகம் குறையட்டும்.. ஹாக்கி நமது தேசிய ஆட்டமாம்..  ம்ம்..  நடக்கட்டும்.. நடக்கட்டும்..
-----------------------------------------------
ஸ்டார் டிவில, பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த கே.பி.சி நிகழ்ச்சி விஜய் டிவியில  இன்னைக்கு ஆரம்பிச்சிருக்காங்க.. இரவு 8  முதல் 9  வரை.. ரொம்ப நாளைக்காப்புரம் அந்த மியூசிக்.. கேக்க நல்லா இருக்கு.. ஹிந்தி தெரிஞ்சு பச்சன் சாஹேப் கம்பீர வாஸ்ல கேட்டது..

அவரோட மேனரிசத்த இங்க சூர்யா காப்பி அடிக்கற மாதிரி எனக்கு தோணுது... கை தட்டச்சே.. இடது கையால வலது கைமேல தட்டறது.. இடது கைய தூக்கி தூக்கி காமிக்கறது.. அப்படியே பச்சன் ஸ்டைல்தான்..

முதல் முதல்ல தேர்ந்தெடுக்கப் பட்ட போட்டியாளர் ரொம்ப நேர்வசாக இருக்குறார். இருக்காத பின்ன.. டி.வி பாக்கச்சே நல்லா அந்த போட்டியாளர கமென்ட் அடிச்சிட்டு பாக்குறது ஈசி.. நா அங்க போனா என்னமா சொதப்புவேணு அங்க போனாத் தான தெரியும். !!
----------------------------------------------------------

ரெண்டு மூணு ஐடியா இருந்தாலும் விரிவா இங்க எழுத முடியல.. இந்த மாசம் இதோட மூனே மூணு போஸ்டுதான்...  ஏதோ நீங்கலாம் என்னோட தொந்தரவு இல்லாம சந்தோஷமா இருந்தாச் சரி..
------------------------------------------------

மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில்..  யூனிட் டிஜிட்டும் டென்த் டிஜிட்டும் மாறிட்டுது (unit digit and tenth digit got interchanged )  ஆயிட்டுது போல.... எப்ப சரி பண்ணுவாங்களோ..!!

அடித்தகொடுஞ் சிலைத்தழும்பு

"அடையாளம் படவொருவன் அடித்தகொடுஞ் சிலைத்தழும்பும்
தொடையாக ஒருதொண்டன் தொடுத்தெரிந்த கல்லும்போல
கடையானேன் வெகுண்டடித்த கைப்பிரம்பும் உலகமெலாம்
உடையானே பொறுத்ததோ உன்னருமைத் திருமேனி..    "

அடாடா.. எட்டாங்கிளாஸ் தமிழ் - செய்யுள் பகுதியில படித்தது..( ம்ம்ம்.. மனப்பாடப் பகுதி) ...  தமிழாசிரியர் வகுப்புல பாடம் நடத்தச்சே மெட்டு போட்டு பாட்டாவே படிச்சு காமிச்சதால இந்தப் பாட்டும் மெட்டோட எம்மனசில இருக்கு.

இது 'திருவிளையாட புராணத்துல' பிட்டுக்கு(இனிப்பு உணவுவகை) மண் சுமந்த கதையில பாண்டிய மன்னன் சிவனென்று தெரியாமல் பிரம்படி கொடுத்ததும்.. உலகத்து மக்கள் அனைவருக்கும் வலிச்சது கண்டு.. சிவனோட திருவிளையாடல் உணர்ந்து.. மனமுருகி பாடியது இந்தப் பாடல். ......

எனது சிவராத்திரி வழிபாட்டின் வெளிப்பாடு.. இப்பதிவு

புரியுதா புதிர் ?

வணக்கம்.. 

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் - இந்திய ஆஸ்திரேலிய  ஆட்டம் கடைசி ஒன்னரை மணிநேரம் டி.வி.ல  பாத்தேன்.... தோணி தடவி தடவி.. நல்லா எங்கிட்ட திட்டு வாங்கிட்டு இருந்தாரு. கடைசி ஓவருல  ஒரு சிக்சர், ஒரு டூ(இடுப்புக்கு மேல வந்த நோ பால்) , ஒரு மூணு  அடிச்சு டீமா ஜெயிக்க வெச்சு .. நா திட்டினது தப்புன்னு நிரூபிச்சிட்டாரு ..

சரி.. சரி.. ஒரு சில கேள்விகள்... உங்களுக்கு..

1) ஜனவரி மாசம் ஏழு தடவ நடந்தது.. இந்த மாசத்துல இப்பத்தான் முதல் தடவையா நடந்திருக்கு அது என்ன?

2) மன்னராட்சி காலம்.. சுவர்ணபுரி, வெள்ளிபுரி அப்படி ரெண்டு நாட்டுக்கு நடுவுல அடிக்கடி சண்டை நடக்கும்.... சுவர்ணபுரி நாட்டோட சுப்பமுத்துனு ஒரு போர் வீரர், தொடர்ந்து நடந்த 18  போர்களில  பங்கெடுத்திருக்கார். அவர் போரில் காயமடைந்து இறந்தார். அவர் மொதொமொதலா கலந்துக்கிட்ட போர்லேருந்து.. நடந்த போர்களுல  எத்தனாவது போர் நடக்கும்போது இறந்தாருனு உங்களால சொல்ல முடியுமா ?

3) வீட்டுல... ஆபீசுல.. கைபேசியை தவறுதலா எங்கயாவது தெரியாம வெச்சிட்டா... கண்டு பிடிக்க.. லேண்ட்லயனே எனக்குத் துணை.. அதுலேருந்து செல்லுக்கு டயல் பண்ணா ரிங் கேட்டு கண்டுபிடிக்கலாம்..  அதனால, எந்தப் பொருளையும் கவனமா வெச்சிக்கணும்னா, கைபேசியோட செயின் போட்டு கட்டிடலாமே..! அல்லது.. இப்படி செஞ்சா என்ன ? எப்படி ?

4) நேத்தைக்கு லஞ்ச் முடிஞ்சு சுமார் ரெண்டு மணிபோல நண்பர் ஒருத்தர் வந்தாரு... கிட்டத்தட்ட இருபது நிமிஷம் பேசிட்டு இருந்தோம். அப்புறம் நாலுமணி வாக்கில  குடும்பத்தோட அவர் வீட்டுக்கு போனோம். அவங்க வீட்டுல எங்களுக்கு ஸ்நாக்ஸ்/டிபன்/காபின்னு கொடுத்து என்னமா அசத்திட்டாரு. அடாடா.. அவரு வந்தப்ப குடிநீர் கூட கொடுக்கல ஆனா, அவரு இப்படி உபசரித்தாரே!  நா தப்பு செஞ்சிட்டோனோ?  --- ம்ம்ம் இல்ல.. இல்ல.. நா வருத்தப் பட வேண்டிய அவசியம் இல்ல.. ஏன் ?  (இது நேற்று நடந்த விஷயம்)


விடைகள்  கீழே ...


1) ஹி.. ஹி...ஹி.. ஹி... என்னோட பிளாக் போஸ்டுதான்..  ஏழு தடவ போன மாசம் (ஜனவரி) போஸ்ட் பப்ளிஷ் பண்ணேன். இந்த மாசம் இதுதான் முதல் போஸ்டு.

2) பதினெட்டாவது போரில் அவர் இறந்தார்னு நீங்க சொன்னா.. அது சரியா இருக்கணும்னு அர்த்தம் இல்ல. அவர் காயம் அடைஞ்சது வேணா பதினெட்டாவது போரா இருக்கலாம்..  பின்னர்.. பல வருடங்கள் கழித்து (பல போர்கள் நடந்த பின்னர்) அவர் இறந்திருக்கலாமே..

3) எல்லா பொருளையுமே லேண்ட்லயனுக்கு(LL ஃபோன்) பக்கத்துல வெச்சா ஃபோன் செய்யப் போகும்போது கண்டு புடிச்சிடலாமே !

4) நாங்க ரெண்டு பெரும் சந்திச்சது ஆன்லையன் சாட்ல.. எப்படி அவர உபசரிப்பது ?
அவரு வீட்டுக்கு நாங்க போனது .. என்னோட மதியத்தூக்கக் கனவுல
------------------------------------------------------

முகப்புத்தகத்திலிருந்து..

ரெண்டு மூணு நாளா முகப் புத்தகத்துல இறங்கி இருக்கேன். முன்னலாம் கூகிள் பஸ்ல பயணம் பண்ணிட்டு இருந்த நான், அது பர்மனெண்டா(!) ஷெட்டுக்கு போயிட்டதால  'கூகிள்+' ட்ரை பண்ணேன்.. ம்ம்ம்.. என்னோட அறிவுக்கு அது எடுபடல.... ஒரு மாறுதலுக்காக முகப் புத்தகத்த மேய ஆரம்பிச்சிருக்கேன் இப்ப.  வடஇந்திய நண்பர்களும் இருக்குறதால கெடைச்ச சில ஹிந்தி சரக்குகள ஹிந்தி தெரியாத/புரியாத தமிழ் நண்பர்களுக்காக இதோ.. தமிழ்ல, 
1 )

அதிகாலையில் துயில் நீக்கி எழுந்திருந்தால், ஆரோக்யமும், புத்தியும், செல்வமும் பெருகுமென்றால் பேப்பர் போடுபவரும், பால் பாக்கெட் போடுபவரும் மற்றவரை விட அதிகம் செல்வம், புத்தி, ஆரோக்கியம் பெருகப் பெற்றிருக்க வேண்டுமே..! .. எனவே.. அதிகாலை சுகம் முழுமை பெற நீ தூங்கு தம்பி.. தூங்கு.. நல்லாவே தூங்கு.. 
==============================
2)  

அபாயமான நட்பு :
ஒரு பையன் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தமைக்கு
தந்தை : இவ்ளோ நேரம் எங்கடா இருந்த ?
பையன் : பிரண்டு வீட்ல....
உடனே தந்தை அவனது பத்து (10) நண்பர்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக   ஃபோன் செய்தார்.. கிடைத்த பத்து பதில்களில் 
நால்வர் சொன்னது : அங்கிள் அவன் என்னோட வீட்டுலதான் இருந்தான்.
மூவர் சொன்னது : இப்பத்தான் உங்க வீட்டுக்கு கிளம்பிப் போனான்..
இருவர் சொன்னது : இங்கதான் படிச்சிட்டு இருக்கான்.. ஃபோன அவன்கிட்ட தரவா ?
ஒருவன் சொன்ன பதில் : (குரல் மாற்றி) அப்பா.. சொல்லுங்க.. என்ன விஷயம் ?
=====================================

நேற்று, இன்று, நாளை...

நேற்றைக்கு முன்தினம் :
'desert' & 'dessertஇரண்டிற்கும் இருக்கும் வேறுபாடு உங்களுக்குத் தெரியுமா ?

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனின் புத்தகத்தில் இது இருந்தது "ஹோமாநிம்" எனும் வரிசையில். ஒரே ஒரு 's' இருப்பது பாலைவனத்தையும், இரண்டு 's' இருப்பது  உணவிற்குப் பின் சாப்பிடும் ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகளையும் குறிப்பதாகும். இந்த வேறுபாட்டை நேற்றைக்கு முன்தினம்தான் தெரிந்துகொண்டேன். பலநாட்களாக எதற்கு 'ஐஸ்க்ரீமை' டெசெர்ட்(பாலைவனம்) என்று குறிப்பிடுகிறார்கள் என யோசித்திருக்கிறேன்,  அகராதியை பார்க்காமலேயே. இப்போதாவது தெரிந்ததே.

'Dessert' & 'Dessert  பற்றி நெட்டில் படித்தபோது தெரிந்துகொண்டது....
பட உதவி லிங்கிற்கு நன்றி
  • A "desert" is a dry, sandy region or wasteland; Also, the verb "desert" means to abandon. 

  • A "dessert" is a sweet dish served at the end of a meal.
  1. Desert(verb) the 'dessert(noun)' in the 'desert(noun)'.
  2. The desert(noun) was full of deserted(verb) desserts(noun).

நேற்று :
உணவகத்தில் கொடுத்த மெனு-கார்டில் ஐஸ்க்ரீம், மில்க் ஷேக், ஃப்ரூட் சாலட், இனிப்பு வகைகள் பட்டியலிடப்பட்ட பகுதியின் தலைப்பு "Desert". ம்ம்ம், மிஸ்டேக்க கண்டு பிடிச்சிட்டேன்..

இன்று எனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ் :
"Republic Day special is back! (!). Shop for 1950 & get cloths worth 1950 free. Also get gift coupns worth 1000 free."

மைன்ட் வாய்ஸ் : அப்படீன்னா நீங்க ரூ.1950னு சொல்லி வியாபாரம் செய்யற பொருளோட உண்மையான மதிப்பு ஜஸ்ட் ரூ. 425 தானா ? 
அதான்.. 425 மதிப்புள்ள பொருள ரெண்டு பங்கு வேலை ஏத்திட்டு (அதே மதிப்புள்ள பொருள் இலவசமாமே !), மேலும் ஆயிரம் ரூபாய் விலை ஏத்தி (ஃகிப்ட் கூப்பனோட மதிப்பு) , விக்கிறதுதான் உங்கள் சிறப்பு தருதலா? (தருதல் = offer ... ம்ம்ம்ம் தறுதலை..)

நாளை :  இனிமே யாரவது இந்தப் பிலாகுப் பக்கம் வருவாங்களா ? ம்ம்ம்.. பாப்போம்.. 

டிஸ்கி : அப்பாடா, இனிமே நானு, "நேற்று இன்று நாளை" ஏதாவது எழுதி ஒப்பேத்தலாம்.. .. (நீங்களும்தான்..)

மனதில் தோன்றிய எண்ணங்கள் சில..

ஒரு சிலர் சில சமயத்துல எப்படி பேசறதுன்னே தெரியாது.. இப்படிலாமே பேசறது நல்லாவா இருக்கு.... என்னதான் அறிவியல் / மாடர்ன் உலகம்னு சொன்னாலும்.. செண்டிமென்ட்னு ஒன்னு இருக்குத்தான..!!
So, Can we make some attempt to avoid saying like...
1) "You'r not supposed to come back !"
2) "I think you should have left by now !"
3) "You will not wakeup in the morning"

என்னைப் பொறுத்தவரையில் இப்படி சொல்லலாமே..
1) To have better result(insisting the work/purpose), You should better be there 
2) To get the work(insisting work/purpost) properly, better to start(the work) now.
3) You always get up lately in the morning.

ஒரு சிலர் பொதுவா, பேசச்சே அடிக்கடி "You know...", "If you do like it.." அப்படிலாம் பேசுவாங்க. 'You' இதுக்கு  "We"  யூஸ் பண்ணலாம். கொஞ்சம் பெட்டரா இருக்கும்.

நேற்று அலுவலகத்தில் ஒரு ப்ரோஜக்ட் மனேஜர் ப்ரெசென்ட் பண்ணப்ப டைரக்டரப் பாத்து அடிக்கடி "You...  you" னு அட்ரெஸ் பண்ணாரு. பொதுவா "நாம இப்படி செஞ்சா.. இந்தப் பிராப்ளம் வரும்.. இப்படிலாம் இருக்கும்.. "னு பேசி இருந்தா பெட்டரா இருந்திருக்கும்னு நா நினைச்சேன். (நீங்கதான் மாட்டினீங்க, அதான் சொல்லிப்புட்டேன்...)

டெயில் பீஸ் : http://www.desimartini.com/allaboutrajni.html
அடாடா ......  .இப்படியும் ஒரு வெப் சைட்டா.... ?
இதுனால என்ன பயன். ?
அட.. நானெல்லாம் பிலாகு எழுதி  என்ன பயன் ? அதே மாதிதானோ !
(தகவல் ஐ.பீ.என் செய்தி நிறுவனம்)

பொங்கல் - சுவையான அனுபவம்


பொங்கல் பண்டிகைனா வீர சாகசம் இருக்கணுமே.. 'காளைய' அடக்கலாமா.. ம்ம்.. அது நம்ம ரேஞ்சுக்கு ரொம்ப கஷ்டம்.. ம்ம்ம்.. வேணுமின்னா 'சிலம்பம் / கம்பு' - ஈசியா சுத்தலாம்..  அது ஜுஜுபி மேட்டரு.. ரொம்பவே ஈசி..
எப்படியா ?  கடைசியா சொல்லுறேன்..
----------------------------

நேத்தைக்கு(15-01-2012) சூப்பர் ஸ்டார் படம்னு ஆசையா டி.வி பாத்தா.... அட.. அதெப்படி.. 'மாப்பிள்ளை' படத்துல ரஜினிகாந்தக் காணுமே.. அவரோட 'மாப்பிளை' (மகள் கணவர்) நடிச்சதாமே..!!

அட.. நேத்திக்குத்தான் ஏமாந்து போயிட்டோம்.. இன்னைக்கு(16-01-2012) சூப்பர் ஸ்டார் நடிச்ச 'மாவீரன்' பாக்கலாம்னு ஆசையா டி.வி போட்டா.. அட... 'மாவீரன்' ரஜினி இல்லாம.. அதெப்படி ? -------- இப்படியா ஏமாத்துறது..

----------------------------
நல்லவேளையா நேத்தைக்கு ஈவினிங் 'எந்திரன்'லயாவது சூப்பர் ஸ்டார் ரஜினியே வந்திருந்தாரு..

இருந்தாலும் அதுல வந்த கதாபாத்திரம் வசீகரனுக்கோ, சிட்டிக்கோ கொஞ்சம் அறிவு கம்மியா இருந்திச்சிங்கோ..

சிட்டி, 'சனா' தனக்கு வேணுமின்னு சொன்னப்பவே.. சிட்டிய உருவாக்கின மாதிரி ஒரே ஒரு சனாவ வசீகரன் உருவாக்கி இருக்கலாம்..

அட.. 'சிட்டி'யாவது தன்னைப் போல ஆயிரமாயிர 'சிட்டி'யா உருவாக்கினதுக்கு பதிலாக ஒரேயொரு 'சனா'வ உருவாக்கி இருந்தா.. எத்தனையோ உயிர், பொருட்சேதம் இல்லாம சுமூகமா போயிருக்குமே..!  நம்மக் கிட்ட யாரு யோசனை கேக்குறாணுக.. ம்ம்ம் :(

------------------
சிலம்பு - ஈசியா  சுத்துறது எப்படி 

ஸ்டேப் 1 : சிலம்பத்த (கம்புதான்)  கையில எடுங்க..
ஸ்டேப் 2 : பூமில ஒரு வட்டம் அந்த சிலம்பு நீளத்தவிட கொஞ்சமாவது பெரிசா டயாமீட்டர்  வர்றா மாதிரி வரையணும் ... ஒகே..
ஸ்டேப் 3 : சிலம்ப அந்த வட்டத்தோட சென்டர்ல இருக்குறாமாதிரி படுக்க வெக்கணும்..
ஸ்டேப் 4 : இதுதான் முக்கியமான ஸ்டேப்.. கவனம் தேவை.. அந்த வட்டத்தோட பாதையில உங்களுக்கு வசதியான ஸ்பீடுல சுத்த ஆரம்பிக்கணும்..

எத்தன ரவுண்டு முடியுதோ அத்தன ரவுண்டு சுத்துங்க -- எப்படி இது ஈசிதான ?
:-)
======================================


தமிழ் -- மொழியும் திருநாளும்.

அனைவருக்கும்..
ஒன்பதாவது உடலுடன்,
            பத்தாவது உயிர் சேர்ந்து..
ஓரரை 'ங' கோர்த்து,
            காலிலே காலெடுத் துவைத்த
வாழ்வின் முதல் பாதியுடன்
            வாத்துக்கள் முன்நீக்கி படி(க்கவும்)



--- அன்பன் மாதவன்

டிஸ்கி : இது உங்களுக்கு புரிந்ததா, இல்லையா என பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி.

முத்தான (!) மூன்று கேள்விகள்..

1) எனது சென்ற பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன்னர் தலைப்பு எழுத மறந்து விட்டேன். முன்னர் ஓரிரு முறை அப்படி நடந்திருக்கிறது. மறுபடியும் எடிட் மோடிற்கு சென்று தலைப்பினை கொடுத்து மறுபடியும் பப்ளிஷ் செய்திருக்கிறேன்.  தலைப்போடன் மறுபடியும் பதிவு வெளியாகும். எனினும் புதிய பதிவு என முதல் முறை பப்ளிஷ் செய்தபோதுதான், என்னை தொடர்பவர்கள் டாஷ்போர்டிங் தெரியும். எனவே அவர்களுக்கு குழப்பம் இருக்காது. நேற்றைய பதிவில் எத்தனை முறை முயற்சி செய்தும், முதலில் விடுபட்ட தலைப்பினை சேர்க்க முடியவில்லை.  :-( யாராவது விளக்கம் சொல்வார்களா ?

2) பிரபல சாட்டிலைட் தொலைக் காட்சியில், வழக்கம் போல பொங்கலுக்கு 'உலகத் தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக' எனச் சொல்லி ஒரு திரைப்படத்தினை வெளியிட இருக்கிறார்கள். ஆனால் அந்தப் படம் ஹிந்தியில் பல முறை (அதாவது உலக.. ஏன்.. ஏன்.. இந்திய தொலைக் காட்சி வரலாற்றிலேயே ) வெளியிடப் பட்டுள்ளது. இன்றைக்கும் 11-01-2012 (புதன்கிழமை) கூட செட்-மேக்ஸ் தொலைக் காட்சியில் (ஹிந்தியில்) மதியம் வெளியிடப் பட்டது.  ஏன்.. ஏன்.. இப்படி ஒரு விளம்பரம் செய்கிறார்கள் என யாராவது சொல்லுவார்களா ?

3) இதுவும் பிரபல தொலைக் காட்சியில் வரும் மெகாத் தொடர் பற்றியது. எங்கள் வீட்டில் பெரும்பாலும் மெகா தொடர்கள் பார்ப்பது இல்லாவிட்டாலும், குழந்தைகளுக்கு விடுமுறை ஆனதால் வீட்டில் ஓய்வு கிடைக்க, நேற்றும் இன்றும் மாலை ஏழரை மணி முதல் எட்டரை மணி வரை மெகாத் தொடர் பார்த்தோம், ஒரு மாறுதலுக்காக. இன்று எட்டு மணி தொடரில் ஒரு சீனில், சிலை கடத்தல் பற்றிய நிகழ்வு வந்தது. அதனை கவனித்த எனது ஏழு வயது மகன் சொன்னது, "அட.. நேத்தைக்கு 'பாண்டி' சிலை கடத்துறதுல மாட்டிக் கிட்ட மாதிரி இன்னைக்கு இந்த ஆண்ட்டி மாட்டிக்கிட்டாங்க".  -- அடா ஆமாம். நேற்று ஏழரை மணி தொடரில் சில கடத்துவது போன்ற சீன இருந்தது. அதெப்படி அடுத்தடுத்த தொடர்கள்ல அடுத்தடுத்த நாட்கள்ல இப்படி கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிகழ்வுகள்
==============================

அன்பு நண்பர்களே..

நல்ல முறையில் புத்தாண்டு பிறந்து பொங்கல் விழாவினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அனைத்து வலைமனை நண்பர்களுக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்களும், அட்வான்ஸ் பொங்கல் வாத்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்.

தொடர்து கடினமான அலுவல் பணியினாலும்... வெளியூர் பயணத்தினாலும் கடந்த ஒரு மாத காலமாகவே நான் எனது வலைமனையில் தொடர்ந்து சரிவர எழுத முடியவில்லை எழுதவில்லை (மைன்ட் வாய்ஸ்.. :  ம்ம்ம்.. போதும்  பில்ட் அப்பு.. மேட்டருக்கு வா).

வலைமனைக் குழு 'டெரர் கும்மி' நடத்தும் 2011க்கான  வலைமனையில் வந்துள்ள பல்வேறு வகைப் பிரிவிகளில் சிறந்த பதிவுகளை கவுரவிக்க நடத்தும் கோலாகலப் போட்டியில் உங்கள் பதிவுகளை இன்னும் இணைக்கவில்லையா ?

கவலை வேண்டாம்..

இன்று (10th ஜனவரி 2012) இரவு பன்னிரண்டு மணிக்குள் இணைத்தால் போதும்.. அதுவரை உங்களுக்கு கால அவகாசம் இருக்கிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் படைப்புகளுக்கான அங்கீகாரத்தை பெறுவீர்களாக. வாழ்த்துக்கள்.

மேலும் விவரங்களுக்கு செல்வீர் 'டெரர் கும்மி'

நன்றி..
உங்கள் நண்பன்..
டெரர் கும்மி உறுப்பினர்
மாதவன்.