கோல்ட் மெமொரீஸ்

ஆபீசு லீவு.... வீட்டுல யாரும் இல்லை.. போர் அடிச்சுது.. அதான் பழைய புத்தக பொட்டிய எடுத்துக்கிட்டு நோண்டினேன்.. கெடைச்சது அந்த 'டீனேஜ்' ஐட்டம். 'கோல்டன்-மேமொரியோட' பாக்க ஆரம்பிச்சேன்....

தங்கமணி வர்றா மாதிரி இன்டிகேஷன். இத்தோட என்னப் பாத்தா திட்டுவாளே! பயந்துக்கிட்டே நா அத வேகமா மத்த புக்ஸுக்கு கீழ வெச்சுடலாம்னு..... ச்சே.. கையோட மாட்டிக் கிட்டோம்......

"என்னங்க.. அதக் கொஞ்சம் என்கிட்டே காமிங்க, நீங்க வேகமா செய்யுறதப் பாத்தா என்னவோ தப்பு மாதிரித் தெரியுது......", சொல்லிக் கிட்டே அத வெடுக்குனு புடிங்கிகிட்டு பாத்தாளே ஒரு பார்வை.... தீ பறந்துச்சி..

"எத்தனைத் தடவ சொல்லியிருக்கேன்.. இத மொதல்ல தூக்கி குப்பைல போடுங்கன்னு, டயத்த வேஸ்டு பண்ணிக்கிட்டு..", சொல்லிக் கொண்டே போனாள் அவள்.

"என்ன அப்படி சொல்லிட்ட, 13 மூணு வருஷத்துக்கு முன்னால இது எனக்கு எவ்ளோ வசதியா இருந்திச்சி தெரியுமா?", கேட்டது நான்தான்.

ஒடனே பதில்-கேள்வி (தங்க்சுதான்) , "அப்பவேணா அப்படி, இதுனால, இப்ப என்ன பிரயோஜனம்?"


"இது இன்னிக்கும் யூஸ் ஆகுறாமாதிரி ஒரு விஷயம் இருக்கு. ஒரு ஊருலேருந்து இன்னொரு ஊருக்கு எவ்ளோ தூரம்னு தெரியணுமா ? 13 வருஷத்துக்கு முன்னால இதுல எழுதினது, இன்னிக்கும் மாறவே இல்லை", சொன்னது நான்தான்.

கேட்டதும், கோவமா எம்மேல அவ கையில இருந்த '1997 'ம் வருஷ ரயிவே டயம் டேபிள் புஸ்தகத்த தூக்கிப் போடுறது தெரியுதா?

"என்னாது, சின்னபுள்ளத் தனமா ? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. ஆமா......", சத்தமா நாஞ்சொன்னது ஒங்க காதுலயாவது விழுதா ?
------------------------------------------------------------

24 Comments (கருத்துரைகள்)
:

செல்வா said... [Reply] 1

வடை எனக்கே..!!

செல்வா said... [Reply] 2

//"என்னாது, சின்னபுள்ளத் தனமா ? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. ஆமா......", ///

எனக்கு கேக்கவே இல்ல .!!

செல்வா said... [Reply] 3

//தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்
///

பல்லு விளக்காதவங்களா இருந்தா எப்படி பேஸ்ட் பண்ணுவாங்க ..?

எஸ்.கே said... [Reply] 4

அப்ப மட்டும் பயன்பட்டுச்சா என்ன?

Arun Prasath said... [Reply] 5

கடைசி வரைக்கும் மொக்கை ஆக போறோம்ன்னு தோணவே இல்ல

ஜெயந்த் கிருஷ்ணா said... [Reply] 6

ப.செல்வக்குமார் said... [Reply] 3

//தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்
///

பல்லு விளக்காதவங்களா இருந்தா எப்படி பேஸ்ட் பண்ணுவாங்க ..?


உனக்கு அந்த பழக்கமில்லன்னு எல்லாருக்கும் தெரியும் செல்வா....

எஸ்.கே said... [Reply] 7

தங்க நினைவுகள்!!!

TERROR-PANDIYAN(VAS) said... [Reply] 8

:)

RVS said... [Reply] 9

சிங்கம் படம் அமர்க்களமாக போட்ட ஆம்பளை சிங்கம் நீங்கள்!!!

karthikkumar said... [Reply] 10

மொக்கைய போட்டுட்டு என்ன சிறுகதைன்னு லேபில் வெச்சிருகீங்க

karthikkumar said... [Reply] 11

TERROR-PANDIYAN(VAS) said...

:)///

நானும் :))

இம்சைஅரசன் பாபு.. said... [Reply] 12

:)->

பெசொவி said... [Reply] 13

:)
(தங்கமணியிடம் திட்டு வாங்குவோரை ஸ்மைலி மட்டும் போட்டு வேறுப்பேத்துவோர் சங்கம்.)

Anonymous said... [Reply] 14

நல்லாருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply] 15

//

ப.செல்வக்குமார் said... [Reply] 3

//தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்
///

பல்லு விளக்காதவங்களா இருந்தா எப்படி பேஸ்ட் பண்ணுவாங்க ..?//

அதான செல்வா என்ன பண்ணுவான் பாவம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply] 16

//வருஷ ரயிவே டயம் டேபிள் புஸ்தகத்த தூக்கிப் போடுறது தெரியுதா?//

இபதான் தெரியுது ஒவ்வொரு தடவையும் ஏன் train மிஸ் பண்றீங்கன்னு

எஸ்.கே said... [Reply] 17

என்னங்க இங்க ஒரே பேஸ்ட் பிரச்சினையா இருக்கு!

சரி அந்த பேஸ்ட்ல உப்பு இருக்குமா?

Chitra said... [Reply] 18

ha,ha,ha.... :-))

NaSo said... [Reply] 19

//பதித்தவர் : Madhavan Srinivasagopalan
பதித்த நாள் : Thursday, December 02, 2010
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
லேபிள்கள்: சிறுகதை //

இது ரொம்ப நல்லா இருக்கு!!

Arun said... [Reply] 20

கடைசி வரைக்கும் எதாச்சும் பெருசா வரும்னு நெனச்சு ஏமாந்துட்டேன் :(

NaSo said... [Reply] 21

//"அப்பவேணா அப்படி, இதுனால, இப்ப என்ன பிரயோஜனம்?"//

இது உங்களை பார்த்துதானே சொன்னாங்க?

அப்பாதுரை said... [Reply] 22

புரியற மாதிரி இருக்கு :)

Anonymous said... [Reply] 23

//என்னாது, சின்னபுள்ளத் தனமா ? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. //
இப்படி சொல்லியும் உங்க தங்க்ஸ் உங்கள நல்லா பெண்டு நிமித்துனத சொல்லவே இல்ல ;)

ஸ்ரீராம். said... [Reply] 24

"எஸ்.கே said...
அப்ப மட்டும் பயன்பட்டுச்சா என்ன?"

இதை வழிமொழிந்து விட்டு படம் சூப்பர் என்று சொல்லி அமைகிறேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...