ஒரு அறிவிப்பு..


---------------------------------------------
கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் நான் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதுங்கள். விதிகள் இரண்டு:

கதையில் கனவோ, பிளாஷ்பேக்கோ வரக்கூடாது.

காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது.

இறுதித் தேதி: அக்டோபர் 15.
---------------------------------------

அட நா சொல்லல.. மேலும் விவரங்களுக்கு  இந்த லின்க்கப் பாருங்க..

நா கூட ஒரு சிறுகதை எழுதிக்கிட்டு இருக்கேன்.. ..  அனேகமா என்னோட அடுத்தப்  பதிவு அதுவாத்தான் இருக்கும்.

எதுக்கு அந்த அறிவிப்ப இங்கு  சொல்லி இருக்கேனா?. .. நண்பர் 'பரிசல்காரன் ' போட்டி விவரத்தை எல்லாருக்கும் சொல்லச் சொன்னாரு.. எனக்கு பரிசு கெடைக்கலன்னாலும், உங்களுக்கு கெடைக்காலாமில்லையா.. அதான்.. ஆல் தி பெஸ்ட்.

4 Comments (கருத்துரைகள்)
:

எஸ்.கே said... [Reply]

வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said... [Reply]

பரிசு உங்களுக்குத்தான்...ஆல் தி பெஸ்ட்...

Chitra said... [Reply]

நீங்க வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

Madhavan said... [Reply]

நன்றி எஸ்.கே, ஸ்ரீராம், சித்ரா.

பரிசு கெடைக்குமோ இல்லையோ.. நா எழுதிய கதை எனக்கு ஒரு சாடிஸ்ஃபக்ஷன தந்துடிச்சு.. எனது கதை விரைவில்.. என்னுடைய வலைப்பூவில்..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...