"அம்மா அருள் 'காமி'-நீ" (சவால் சிறுகதை)


ஒரு ஊருல ஒரு கணவன், மனைவி இருந்தாங்களாம்.. நெறையா பொன், பொருள், வீடுவாசல், நெலம், இருந்தாலும் அவங்களுக்கு ஒரே ஒரு தீராத கொறை இருந்திச்சாம். அதான்.. கல்யாணமாகி ரொம்ப வருஷமாகியும் கொழந்தையே இல்லையாம். அவங்க, கோவிலுக்கு போயி அம்மன்கிட்ட, 'அம்மா, எங்களுக்கு அருள் காமி நீ' ன்னு மனம் உருகி வேண்டிகிட்டாங்க. தங்களுக்கு கொழந்தை பொறந்துச்சின்னா அந்த ஊரு கோவில் அம்மனுக்கு ஒரு வைர மூக்குத்தி, வைரத்தோடு எல்லாம் வாங்கி அணிவிக்கறதாகவும் வேண்டிகிட்டாங்கலாம் .....

அந்தநாளுலேருந்து ஒரு வருஷம் முடியறதுக்குள்ள, அவங்களுக்கு ஓரு அழகான பெண் குழந்தை பொறந்துச்சாம். அம்மனோட அருளப் பாத்து சந்தோஷமடைஞ்சு, 'காமினி' ன்னு அந்த குழந்தைக்கு பேரு வெச்சாங்க. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய்.. 'காமினி' ஒரு நல்லா புத்திசாலிப் பெண்ணாகவும், அழகு மற்றும் அறிவுடன் வளர்ந்தாள்.

(விதிகளின் படி ரிவைண்டு /ப்ளாஷ் பேக் / கொசுவத்தி இதெல்லாம் இருக்கக் கூடாதாம்.. ஆனாலும் 'பாஸ்ட் பார்வாடு' பண்ணலான்னு நெனைக்கிறேன், அதனால..)

------ பல வருடங்களுக்குப் பிறகு.......
(எத்தனை வருஷம்னு சொன்னா, நம்ம ஹீரோயின் 'காமினி'யோட வயச கண்டுபிடிச்சிடுவாங்களே..!)


"அம்மா நா டியூடிக்கு போயிட்டு வரேன்..", காமினி சொன்னாள். "பத்திரமா போயிட்டு வா", அது அம்மா. தனது 'மாருதி ஸ்விஃப்டு ' ஸ்டார்ட் செய்து, நேரே, தான் வேலை செய்யும் மருத்துவமனையை நோக்கி செலுத்தினாள்  Dr. காமினி.  என்னதான் சொத்து சுகம் இருந்தாலும், தனது மகள், மக்களுக்கு சேவை (சர்வீஸ்) செய்வதற்காகவே மருத்துவமனையில் மருத்துவப் பணி செய்யும் குணத்தினை கண்டு பெருமை கொண்டாள் அவள் அம்மா. அமாங்க.. 'காமினி' ரொம்பவே நல்ல உள்ளம் கொண்டவள்.
(வடிவேலு பாணில சொல்லனும்னா, 'அவ ரொம்பவே நல்லவ'.)

அன்றையதினம் ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை இருந்தது. Dr. காமினி அன்று அறுவை சிகிச்சை செய்யும் தலைமை மருத்துவருக்கு அடுத்தப் பொறுப்பில் இருந்தாள். இது 'காமினி' கலந்து கொள்ளும் இரண்டாவது அறுவை சிகிச்சையாதலால், மேலும் தான் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து அவள் கவனமாகவும், ஆர்வமாகவும் இருந்தாள்.

(கதை ரொம்ப ஸ்லோவா போகுதா.. அதான் பாஸ்டு பார்வர்டு போட்டேனே.. அது போதாதா.. சரி.. ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வருவோம்.)

அறுவை சிகிச்சை நல்லா விதமாக முடிந்தது.. எனினும், தான் இன்னும் சற்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பதால்.. டாக்கரிடம், "நான் இன்னும் கொஞ்ச நேரம் பேஷண்ட அப்சர்வ் செய்லாம்னு நெனைக்கிறேன்.. அதற்கு உங்க பெர்மிஷன் வேணும்." அனுமதி அளிக்கப்பட்டது. நர்சுகள் முதலில் வெளியேற.. பின்னர் சிறிது நேரம் வரை, தலைமை டாக்டர் கூட ஆபரேஷன் தியேட்டரிலேயே இருந்துவிட்டுச் சென்றார்அவர் வெளியே  செல்லும் பொது, ஆபரேஷன் அறைக் கதவு மூடப்பட்டு, 'ப்ளக்' என்ற சப்தம் வந்தவுடன், அவள் அந்த தவறை உணர்ந்தாள். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.


அந்த சூழ்நினையில், அவளிடத்தில் யாராக இருந்தாலும் அதை செய்வது தான் சரியானதாகும். டாக்டர் கதவினை கவனமின்றி வெளிப்புறமாக தாழிட்டு விட்டார்.... ஏசி சத்தத்தில், தான் கூப்பிடுவது யாருக்கும் கேட்காது.. அந்த அறையிலோ அலைபேசி / இன்டர்காம் அனுமதி இல்லை.. .. ஒருவேளை 'பேஷண்டுக்கு' ஏதாவது அவசர மருத்துவத் தேவைன்னா.. அப்போ கதவ திறக்க முயற்சி செய்வது தப்பா போயிடுமோ.. அதனாலத்தான் 'காமினி' அப்படி செய்தாள். நாலு பெருக்கு வெயிட் பண்ண வேண்டியதில்லை, ஒருத்தருக்கு கஷ்டம் வரும்போல இருந்தா கூட இந்த மாதிரி செய்வது தப்பில்ல..(என்ன சொல்லுறீங்க, சரிதானே ?).

என்னதான் சரியான செயல் செய்தாலும்.. சற்று படபடப்பு ஏற்பட்டது அவளுக்கு. கொஞ்சம் டென்ஷன் வந்ததால், களைப்பாகக் காணப் பட்டாள். இருந்தாலும் உடனே அவள் ஆபரேஷன் தியேட்டர் சென்று கதவை திறந்து.. நர்ஸ்களிடம் அந்த பேஷண்டை ஸ்பெஷல் வார்டுக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டாள்.

களைப்புடன் அங்கேயே உட்கார்ந்தவள் அடுத்த வினாடி அது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வேகமாக ஒருவன் பின்னாலிருந்து அவளை நோக்கி வந்து, யாருக்கும் தெரியாத படி, கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னுடைய குரலை மாற்றி.
ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலைஎன்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. பயத்தில் காமினிக்கு வந்த விக்கல் சட்டென்று நின்றுவிட்டது."ஹா.. ஹா, பாத்தியா ஒரு டாக்டருக்கே  வைத்தியம் செஞ்சுட்டேனே..".. என்று சொல்லுவதை கேட்ட 'காமினி' கோபத்துடன் அவனிடம்.. அதுக்காக.. இப்படியா பயமுறுத்துறது ?" என்றாள். "மறுபடியும் சாரி.. இந்த பக்கமா வந்தேன்.. அப்படியே என்னோட தேவதைய ஒரு தடவை சைட்டடிச்சிட்டு போகலாமுன்னு வந்தா.. இங்க நீ ஜன்னல் வழியா குதிச்சு வந்த கதைய கேட்டு, நீ எப்படி இருக்கேன்னு தெரிஞ்சிக்க வந்தேன்.. நீ ரொம்ப டயர்டா.. விக்கிக் கிட்டு இருந்தே.. அதான் என்னோட அதிர்ச்சி வைத்தியம், விக்கல் நின்னுடிச்சி பாரு. இந்த துப்பாக்கி கூட 'தீபாவளி' கேப்பு வெடிக்க என்னோட அக்கா பையனுக்கு வாங்கினதுதான்.. சரி சரி.. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க.. நா அப்புறமா வரேன்..", சொல்லிவிட்டு வெளியேறினான், அவளால் நான்கு  மாதங்களாக காதலிக்கப்படும், காதலன் சிவா.

(அஹா ரெண்டு மேட்டரை கோத்தாச்சு.. இன்னும் ஒரு மேட்டரு தான் பாக்கி.. 'டயமண்டு' மேட்டரு.... சரி சரி.. அதுக்கு சரியான நேரம் கெடைக்காதா என்ன ?)தன்னை சுதாரித்துக் கொண்டு, பழம் உண்டு, தண்ணீர் பருகி, வழக்கம்போ 'இன்- பேஷண்டுகளை' பார்க்கும் ரவுண்ட்சுக்கு சென்றாள். ரவுண்ட்சு முடிந்து 'அவுட் பேஷண்டுகளை' பரிசோதிக்க தனது அறைக்குள் சென்றாள்.

(மீண்டும் பாஸ்டு பார்வர்டு.. இல்லேன்னா ரொம்ப போரடிக்கும்.... நாம பேஷன்டா ஹாஸ்பிடல் வெளிய நின்னு நெறையா அனுபவச்சிருக்கோம்.. போதும்டி அம்மா.. - இது அம்மன் சம்பத்தப்பட்ட கதை.. அதனால 'சாமி' க்கு பதிலா 'அம்மா')

மதிய உணவுக்கு வீட்டிற்கு செல்ல, டாக்டர்'ஸ் கார் பார்கிங் வந்து தனது கார் கதவை திறந்து போது, எதிர் பக்க கதவின் கண்ணாடியை மூடாமல் சென்றது தெரிய வந்தது.. குனிந்து டிரைவர் சீட்டில் உட்காரும் போது சீட்டில் ஏதோ தட்டுப் படுவது தெரிந்தது.. எடுத்துப் பார்த்தால்.. ஜொலிக்கும் வைரத் தோடுகள் ....பார்த்த உடனேயே தெரிந்தது, அவைகள், தனது பெற்றோர்களால் கோவில் அம்மனுக்கு அணிவிக்கப் பட்டது.

நேரே கோவிலுக்கு சென்றாள்.. அங்கு போலிஸ் குழுமியிருந்தது.. இன்ஸ்பெக்டரிடம் சென்று, அந்த தோடுகளை கான்பித்தாள். தான் பேசும் முன்னரே,காமினி...  வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியேஎன்று பாராட்டினார் பரந்தாமன். "இன்ஸ்பெக்டர் ப் போலீஸ்" என்று அவருடைய சட்டையில் மெட்டல் ப்ளேட் தொங்கியது. "என்ன சொல்லுறீங்க இன்ஸ்பெக்டர், எனக்கு எதுவுமே புரியலே" என்றாள் காமினி.

"இந்த கோவில் பாதுகாப்புக்கு வெச்சிருந்த ரெண்டு கான்ஸ்டபுளும், திட்டம் போட்டு இன்னிக்கு இந்த ரெண்டு வைரத் தோடுகளையும் திருடிட்டு ஓடிட்டானுங்க.. நாங்க தேடிக்கிட்டு இருக்கோம் அவங்களை. உங்களுக்கு எப்படி இந்த வைரத் தோடுகள் கிடைத்தன ?" எனக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

"ஹாஸ்பிட்டலுல என்னோட கார் சீட்டுல இருந்துச்சி.. அடையாளம் நல்லா தெரிஞ்சதுனால, உடனே இங்க வந்துட்டேன்", சொன்னாள் காமினி.

"கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காகக் கொடுத்தார்.." என்று சிணுங்கியது, இன்ஸ்பெக்டருடைய அலைபேசி. "ஹலோ இன்ஸ்பெக்டர் பரந்தாமன் ஹியர், என்னது...., அப்படியா.... நல்லது, நான் உடனே ஸ்டேஷனுக்கு வருகிறேன்" என்று பேசிய இன்ஸ்பெக்டர் தனது அலைபேசியில் வந்த 'காலை'(call) கட் செய்துவிட்டு.. அந்த தோடுகளுடன், காமினியையும் .அழைத்துக் கொண்டு போலிஸ் ஸ்டேஷன் சென்றார்.

ஸ்டேஷனில் ...
இன்ஸ்பெக்டர் பேச ஆரம்பிச்சார் "அப்பாடா இந்த கேஸு ஆரம்பிச்ச ஒரு மணி நேரத்துலேயே சால்வாயிடுச்சு.., நான்தான் போலீஸு கான்ஸ்டபிள் ரெண்டு பேரையும் வீணா சந்தேகப் பட்டுட்டேன்.. அந்த ரெண்டு கான்ஸ்டபிளையும் அடிச்சு கட்டி போட்டுட்டு அவங்க யுனிபோர்மப்
போட்டுக்கிட்டு ரெண்டு திருட்டுப் பசங்க கொவில காவல் காப்பது மாதிரி, சமயம் பாத்து அந்த வைரத் தோடுகளை திருடிட்டு சத்தம் போடாம கொவில்லேருந்து நழுவிட்டாங்க.. வெளியே போலிஸ் உடைல போனதால சந்தேகம் யாருக்கும் வரலை.. இருந்தாலும் அவங்களுக்கு பயம் இருந்திச்சு.. உங்க ஹாஸ்பிடல் பக்கமா போனப்ப உங்க காரோட கண்ணாடி கொஞ்சம் திறந்து இருந்ததால அவுங்க தோடுகளை காருக்குள்ள போட்டு காரோட போகலாம்னு   நேனைச்சப்ப ஹாஸ்பிடல் செக்யூரிட்டி அவுங்கள சந்தேகமா பாத்து என்ன, எதுன்னு கேக்க... அவங்க புதுத் திருடங்க போல... பயத்துலேயே தாறுமாறா ஓட.. ரோட்டுல ஒருத்தன் ஒரு மோட்டார் பைக் மேல மோதி விழ.. அடுத்தவன் தப்பிச்சிட்டான்.. விழுந்தவன்  முழிசச் முழில டிராபிக்கு போலீஸு சந்தேகப் பட்டு அவனை விசாரிக்க.. அவன் எல்லா உண்மையையும் சொல்லிட்டான்.. அவனோட தகவல்படி செயல் பட்ட போலீஸு, அந்த கூட்டாளியையும் பிடிச்சுட்டாங்க, கான்ஸ்டபிள்களையும் காப்பாத்திட்டாங்க.."

"சரி சார்.. எதிர் பாக்காத சம்பவங்கள்.. நா ரொம்ப களைப்பா இருக்கேன்.. பசி கூட.. ஏதாவது பார்மாலிடீஸ் இருந்தா அப்புறமா சொல்லுங்க.. இப்போ நா வீட்டுக்குப் போறேன்", எனச் சொல்லிவிட்டு அவர் பதிலுக்குக் கூட காத்திராமல் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து தனது காரை ஸ்டார்ட் செய்தாள் . வீட்டிற்கு வரும் வரை அவள் மனதில் 'கோவில் அம்மனும்', சிவாவும்' மாறி மாறி வந்து சந்தோஷம் தந்தார்கள்.பின்குறிப்பு : போலீஸ கெட்டவரா காமிச்சா நல்லா இருக்காது. 'வேலியே பயிர மேஞ்சிதுன்னா நல்லா இருக்குமா?' அதான்.. அவுங்களையும் நல்லவர்களா காட்டி இருக்கேன்..

டிஸ்கி :
1) மொத தடவையா கதை விடுறேன்.... நல்லா இருக்குதா பின்னூட்டத்துல சொல்லுங்க..
2) மறக்காம  இன்ட்லில ஓட்டுப் போடுங்க..
3) பரிசல்காரன் சிறுகதை போட்டிக்கு இதை அனுப்பியுள்ளேன்
4 ) சிகப்புக் கலரில் உள்ள வரிகள் -- பரிசல்காரன் விதிப்படி அமைந்தது.. 

24 Comments (கருத்துரைகள்)
:

RVS said... [Reply]

பாஸ்ட் பார்வர்ட் ஐடியா நல்லா தான் இருக்கு. ஆனால் நடு நடுவில உங்களோட சேஷ்டைகளை குறைச்சிருக்கலாம். சிறுகதை எழுதும் பொது நடுவில நீங்க சொல்ற ஹிண்ட்ஸ் கதையோட ஓட்டத்தை பாதிக்குது. மத்தபடி பிரெஷ் ஐடியா. முதல் விதியோட ஒயர்களை எல்லாம் பிடிங்கிவிட்டு கொஞ்சம் இடிக்கிது.
மொத்தத்தில் வித்தியாசமான கோணத்தில் நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

DREAMER said... [Reply]

இப்படி ஒரு மிகவும் கடினமான (அதே நேரம் சவாலான) காம்பினேஷனில் அமைந்துள்ள சிறுகதை விதிக்கு முடிந்தவரை கோர்த்து எழுதியிருப்பது ஒரு சவாலான முயற்சியே..! வாழ்த்துக்கள்!('கேணிவனம்' இல்லைன்னா நானும் இந்த சிறுகதை போட்டியில் பங்கேற்றிருக்கலாம்)

-
DREAMER

அப்பாதுரை said... [Reply]

ரூல்சைக் கொஞ்சம் திருப்பிப்போட்டு வித்தியாசமா தொடங்கினீங்க.. RVS சொன்னதை நானும் நினைச்சேன்... கதைக்கு நடுவே உங்க இடைச்செருகல் கவனத்தை கதையிலிருந்து திருப்புவதாக நினைக்கிறேன். (காமி நீனு தலைப்பைப் பார்த்ததும் நாக்கைத் தொங்கப் போட்டுகிட்டுப் படிச்சேன், கெட்ட மனசு என்னுது.)

ஆதி மனிதன் said... [Reply]

ஊஹூம், கையோட படிச்சு முடிச்சிடலாம்னு நினைச்சேன். முடியல. பிறகு நிதானமா படிச்சுட்டு கமென்ட் போடுறேன். எப்படியிருந்தாலும் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said... [Reply]

அது சரி, யாரு கத எழுதினாலும் ஏன் காமி நீ / காமினி ன்னு பொம்பள பேர்தான் வெச்சிகிறீங்க புள்ளகளா?
நாட்டுல வேற பொம்பளைங்க பேரா இல்ல ?

எல்லான் கெட்ட பசங்கப்பா! ................அது ஆரு/ ஓஓஹோ R.V.S. அம்பியா ? அதான்!! :))))

--

ஸ்ரீராம். said... [Reply]

ஆர் வி எஸ் மற்றும் அப்பாதுரை கருத்துக்களை வழி மொழிகிறேன்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said... [Reply]

//"2) மறக்காம இன்ட்லில ஓட்டுப் போடுங்க."//

அதெல்லாம் சமர்த்தா தானா போட்டுடுவேன். சொல்லவே வேணாம்!

Madhavan Srinivasagopalan said... [Reply]

//ஸ்ரீராம். said..." அதெல்லாம் சமர்த்தா தானா போட்டுடுவேன். சொல்லவே வேணாம்!" //

bsr -- நீங்கதானா.. நன்றி.. ஸ்ரீராம்

செல்வா said... [Reply]

//(எத்தனை வருஷம்னு சொன்னா, நம்ம ஹீரோயின் 'காமினி'யோட வயசகண்டுபிடிச்சிடுவாங்களே..!)//

அறிவாளிங்க நீங்க ..!!

எஸ்.கே said... [Reply]

அருமையா இருக்கு! வாழ்த்துக்கள்!

செல்வா said... [Reply]

முதல் தடவ கதை விட்டாலும் நல்லாவே விட்டுருக்கீங்க ..!
அப்புறம் இண்டலில ஓட்டு போடுரக்கு நீங்க சப்மிட் பண்ணவே இல்லையே .?
அப்புறம் எங்க ஒட்டு போடுறது ..?

dondu(#11168674346665545885) said... [Reply]

நல்ல கதை, நல்ல கற்பனை (நகநக). இண்ட்லியில் ஓட்டும் போட்டாச்சு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhavan Srinivasagopalan said... [Reply]

//ப.செல்வக்குமார் said... நீங்க சப்மிட் பண்ணவே இல்லையே .?
அப்புறம் எங்க ஒட்டு போடுறது ..?//

Sorry.. Now, I have made the link for the text "இன்ட்லில" above.

Anonymous said... [Reply]

saar very gud some how u've linked the title with the body.imm idhula kadhal sanda thril lam irkku.keep it up

Starjan (ஸ்டார்ஜன்) said... [Reply]

கலக்கிட்டீங்க மாதவன்..

என்னமோ போடா மாதவா.. பின்றீயே (ஜனகராஜ் ஸ்டைலில் படிக்கவும்).

சுவாரசியமா இருந்தது. வெற்றிபெற வாழ்த்துகள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

//RVS said "சிறுகதை எழுதும் பொது நடுவில நீங்க சொல்ற ஹிண்ட்ஸ் கதையோட ஓட்டத்தை பாதிக்குது"// &

//அப்பாதுரை said.. "RVS சொன்னதை நானும் நினைச்சேன்... கதைக்கு நடுவே உங்க இடைச்செருகல் கவனத்தை கதையிலிருந்து திருப்புவதாக நினைக்கிறேன். "//

//ஸ்ரீராம். said..."ஆர் வி எஸ் மற்றும் அப்பாதுரை கருத்துக்களை வழி மொழிகிறேன்."//

Thanks for the advice.. I will try to avoid.

Madhavan Srinivasagopalan said... [Reply]

//DREAMER said..."இப்படி ஒரு மிகவும் கடினமான (அதே நேரம் சவாலான) காம்பினேஷனில் அமைந்துள்ள சிறுகதை விதிக்கு முடிந்தவரை கோர்த்து எழுதியிருப்பது ஒரு சவாலான முயற்சியே..! வாழ்த்துக்கள்!('கேணிவனம்' இல்லைன்னா நானும் இந்த சிறுகதை போட்டியில் பங்கேற்றிருக்கலாம்)"

@ Dreamer -- கேணிவனம் -- ரொம்ப நல்லா எழுதுறீங்க.. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@ ஸ்வேதா -- தேங்க்ஸ்
@ ஆதிமனிதன்.. -- லேட்டானா பரவாயில்லை.. படிச்சிட்டு கமெண்டு போடுங்க..
@ கக்கு -- 'காமினி' பேரு வெச்சது போட்டு நடத்துறவங்க.. அதான்..
@ டோண்டு சார்.. -- உங்களைப் போல பெரியவங்க பாராட்டுறது, மகிழ்ச்சியா இருக்குது.. சார், அதென்ன 'நகநக'....?
@ அனானி -- தாங்க்ஸ்..
@ ஸ்டார் ராஜன்... பாராட்டிற்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்..

T.V.ராதாகிருஷ்ணன் said... [Reply]

நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

பெசொவி said... [Reply]

கதை நல்லா இருக்கு, ரொம்ப பெருசா இருக்கறாப்ல ஒரு பீலிங்............அவ்ளோதான்!

R. Gopi said... [Reply]

இவ்ளோ கமென்ட் வந்திருக்கே. அப்படின்னாலே நல்லா இருக்குன்னுதான் அர்த்தம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கௌதமன் said... [Reply]

நான் கூடத்தான் வோட்டுப் போட்டேன் - எனக்கு நன்றி எல்லாம் சொல்லலை. உங்க பேச்சு க்கா,,,

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ TVR -- thanks for ur words.

@ பெயர் சொல்ல விருப்பமில்லை --
சிறுகதை.. அதனாலதான் இந்த பெரிசா இருக்கு.. நா நாவல் எழுதினா.. பார்ட் பார்ட்டா வந்துண்டே இருக்கும்..

@ Gopi Ramamoorthy -- அட.. அப்படிவேற இருக்குதா.. ஆனா.. மத்த போட்டிக் கதைகளுக்கு இதை விட அதிகமா கமெண்டு இருந்தா.. அது இத விட நல்லா இருக்குனு அர்த்தமோ ?

@ kggouthaman -- 'க்கா'லாம் விடாதீங்க... பதிவுலகத்துல மொதோ மொதல்ல எனக்கு பரியச்சமானவங்கள்ள நீங்களும் ஒருவர்.. எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்.. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. ஆதரவை தொடர்ந்து தாருங்கள் (இங்கு கமெண்டும், இன்ட்லியில் ஓட்டும் போட்டு)

Unknown said... [Reply]

arumai nanbarey!

Abhi said... [Reply]

நலலா எழுதியிருக்கீங்க! வெற்றி பெற வாழ்த்துக்கள்! நானும்எழுதியிருக்கேன் ... வைரம் உன் தேகம் ங்கற தலைப்பில்... http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...