ரொம்ப தெளிவாத்தான் இருக்கான்..

நாம படிச்ச காலத்துல 'ஹிந்தி' சப்ஜெக்டு ஸ்கூலுல கெடையாது.. வேலைக்காக வேற மாநிலத்துக்கு, முக்கியமா வட(நோ.. நோ.. நாட் "மீ தி ஃபர்ஸ்டு" அது 'வடை'.. இது 'வட'-திசை) இந்தியா பக்கம் போன ஆரம்ப நாள்ல.. 'ஹிந்தி' தெரியாம நா பட்ட கஷ்டம்.. அனுபவப் பட்டவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா 'ஹிந்தி' கத்துக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு ஹிந்தி தெரிஞ்ச/புரிஞ்ச சமயத்துல ஒருத்தன் ஹிந்தில சொன்ன ஜோக்க புரிஞ்சுக்க எனக்கு ரெண்டு நாளாச்சு.. (நல்ல வேளை, அது டியூப் லைட்டு ஜோக்கு இல்லை).

எது எப்படியோ, 'ஹிந்தி' தெரிஞ்சதுனால ஒரு மொக்கையாவது போட முடிஞ்சுது (இது ரெண்டாவது). சரி விஷயத்துக்கு வாரேன்.

நாம பட்ட கஷ்டம் நமக்கடுத்த தலைமுறைக்கு அநேஹமா இருக்காது.. இப்பலாம் எல்லா ஸ்கூலுளையும் 'ஹிந்தி' சொல்லித்தராங்க. நம்ம பையனுக்கு ஒண்ணாம் க்ளாஸ்லேருந்து 'ஹிந்தி' பாடம் உண்டு. இந்த (ரெண்டாம் கிளாஸ்ல) அவனுக்கு 'கதை-கட்டுரைகளும்' 'ஹிந்தி' பாடத்துல இருக்குது. நம்ம வீட்டம்மாக்கு நம்மளவுக்கு 'ஹிந்தி' தெரியாது( இதுலயாவது நமக்கு முதலிடம், வூட்டுல). அதனால ரெண்டு நாளைக்கு முன்னால, நம்ம பையனுக்கு பாடம் சொல்லித்தர வேண்டி இருந்தது.. பாடத்தின் பக்கத்த கீழ படத்துல கொடுத்துருக்கேன். 'சிங்கத்தின் சப்தம்' (शेर की आवाज) என்ற தலைப்பில் அமைந்த ஒரு சிறிய நிகழ்வை சொல்லும் பாடமது.

சாராம்சம் : சிறுவர்-சிறுமியர் ஒரு முறை வயல் வெளிக்கு சென்றனர். அங்கு நன்றாக விளையாடினார்கள். பலவித பழங்களையும் உண்டு மகிழ்ந்தனர். பிறகு மீண்டு விளையாடினார்கள். அப்போது, ரமேஷ் என்ற சிறுவன், சிங்கத்தின் முகமூடியினை (மாஸ்க்) அணிந்துகொண்டு சிங்கம் போல கர்ஜனை செய்தான். அதனைக் கண்ட மற்ற சிறுவ-சிறுமிகள் பயந்து விட்டார்கள். பயத்தில் ஓட ஆரம்பித்தார்கள்.

நில்லுங்கள் ! நில்லுங்கள் ! இங்கு சிங்கம் (சிங்கிளா கூட) இல்லை.. இல்லவே இல்லை. ரமேஷ்தான் சிங்கம் போல வேடம் பூண்டிருக்கிறான். எல்லாரும் பயந்து விட்டீர்களே! ஆஹா, என்ன அருமையான வேஷப் பொருத்தம்.. அச்சசல் சிங்கம் போலவே கர்ஜித்து எல்லோரையும் பயமுறுத்தி விட்டானே அவன். அதான் சங்கதி.

இதுக்கும் தலைப்புக்கு என்ன சம்பந்தம் ? இருங்க தலைப்ப நா இன்னொருதரம் பாத்துட்டு பதில் சொல்லுறேன். ஆங்... தலைப்பு சரியாத்தான் இருக்கு.. நம்ம பையன் கொஞ்சம் தெளிவாத்தான் இருக்குறான்.

நம்ம பையனுக்கு நான் சொல்லித் தரும் பொது "ரமேஷ் என்ற சிறுவன், சிங்கத்தின் முகமூடியினை (மாஸ்க்) அணிந்துகொண்டு சிங்கம் போல கர்ஜனை செய்தான். அதனைக் கண்ட மற்ற சிறுவ-சிறுமிகள் பயந்து விட்டார்கள். பயத்தில் ஓட ஆரம்பித்தார்கள்.", என்ற வரிகளை சொல்லியவுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்த்துவிட்டு, "எதுக்கு பயந்து ஓடுறாங்க ?. அதுதான் சிங்கம் இல்லியே.. அது லயன்-மாஸ்க் போட்ட ரமேஷ்தானே' அப்படீங்கறான். இப்ப சொல்லுங்க, நம்ம பையன் வெவரந்தானே ?

12 Comments (கருத்துரைகள்)
:

RVS said... [Reply]

பையன் "ரொம்ப" தெளிவு தான்.... யாரோட பையன்.. ;-)

Chitra said... [Reply]

He is smart!


நிஜம்தான்..... கொஞ்சம் புத்திசாலித்தனமான கதைதான் போட்டு இருந்து இருக்கலாமோ?

Gopi Ramamoorthy said... [Reply]

சூப்பர்.

\\முக்கியமா வட(நோ.. நோ.. நாட் "மீ தி ஃபர்ஸ்டு" அது 'வடை'.. இது 'வட'-திசை)\\

\\இதுலயாவது நமக்கு முதலிடம், வூட்டுல\\

சூப்பரோ சூப்பர்

Gopi Ramamoorthy said... [Reply]

சொல்ல விட்டுப் போச்சு. பதிவின் தலைப்பு சூப்பர் டூப்பர். அப்படியே பையனுக்கு சுத்திப் போடுங்க

ஸ்ரீராம். said... [Reply]

//நம்ம பையன் வெவரந்தானே ?//

ஆமாம்...ஆமாம்..

//RVS said...
பையன் "ரொம்ப" தெளிவு தான்.... யாரோட பையன்.. ;-)//

அதானே...

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

நல்ல தெளிவு தான்.

என்னது நானு யாரா? said... [Reply]

பின்ன உங்க பையனாச்சே! சொல்லவா வேணும். அதுவும் இந்த காலத்துப் பசங்க அந்த பாடத்தில வர்ற பசங்க மாதிரி இல்லப்பா! நல்ல பகிர்வு நல்லா ரசிக்க முடிஞ்சது

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

உண்மையிலேயே இந்த காலத்து குழந்தைகள் விவரம்தான். என் பொண்ணு கிட்ட நான் பட்ட பாட்டை படிச்சு பாருங்க.

மோகன் குமார் said... [Reply]

உங்க பையன் செம விவரந்தான்

Madhavan said... [Reply]

நன்றி ஆர்.வி.எஸ், கோபி, ஸ்ரீராம், பெ.சோ.வி, இயற்கை-வசந்த், சித்ரா-புவனேஸ்வரி மேடேம்ஸ், மோகன் (ரொம்பநாளாச்சு.. வாங்க.. வாங்க. ரொம்ப சந்தோஷம், நீங்க மீண்டும் வந்ததுல..)

Gayathri said... [Reply]

haha super sama chutti unga payyan

சாய் said... [Reply]

//ஆரம்ப நாள்ல.. 'ஹிந்தி' தெரியாம நா பட்ட கஷ்டம்//

ஐயோ கரெக்ட். நான் Lotus Software மற்றும் IBM Software பிசினஸ் மேனேஜர் ஆக இருந்த காலத்தில் இந்தியாவில் எல்லா ஊருக்கும் செல்வேன். ஐயோ அப்போது நான் பட்ட கஷ்டம் ! டெல்லியில் என் ஆபிஸ் இருந்த இடத்தில் லிப்டில் ஆறாவது மாடிக்கு செல்லவேண்டும். என் கலரையும் / என் மூஞ்சியும் பார்த்தவுடனே அந்த லிப்ட் operator எந்த மாடி என்று கேட்டார். அவருக்கு चे என்று ஆறாவது மாடிக்கு சொன்னேன். அவர் அப்படி எதுவும் இல்லையே என்று என்னை போட்டுப்பார்த்தார் ! அவருக்கு சட்டமாலா (யாருக்கு எது என்னவென்று தெரியும் !) என்று சொன்னால் தான் போவேன் என்று பிடிவாதம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...