தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் தனது நீண்ட வாளை எடுத்துக் கொண்டு, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தை தன் தோள் மீது போட்டுக் கொண்டு கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தான். போகும் வழியில் அவனிடமிருந்து விடுபட, அவனது மௌனத்தை கலைக்க வேண்டும். இதனை மனதில் நினைத்த வேதாளம், வழக்கம்போல ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது...
சிம்மபுரி என்ற நாட்டை சுயமித்தரன் என்ற அரசன் சீரோடும் சிறப்போடும் ஆண்டு வந்தான்... அவனது ஆட்சியில் மக்களும் நேர்மையாக உழைத்து நாட்டிக்கு பெருமை சேர்த்தனர்... மக்கள் மீது அரசன் வைத்திருந்த அன்பும், பண்பும் அனைத்து மக்களையும் கவந்திருந்தது. அரண்மனை இரவுக் காவலாளி முத்து அந்த அரச குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான்.
அந்நாட்டின் இளவரசன் வில்வித்தையில் நன்கு கற்று தேர்ச்சி பெற்றிருந்தான். ஒருமுறை, இளவரசன் காட்டிற்கு தோளில் அம்பறாத்துணி நிரம்பிய அம்புகளை ஏந்தி வில்லுடான் (will ) -வேட்டையாட கிளம்பும் பொது, முத்து அவனிடம் சென்று.. முந்தைய இரவு தான் தூங்கும் பொது, கனவில், இளவரசனுக்கு, காட்டில் பேரபாயம் காத்திருப்பதாகவும், வேட்டைக்கு போகவேண்டாமெனவும் சொன்னான். இளவரசனோ, தனக்கு தனது வில் வித்தையில் மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும், தனக்கு காட்டில் தீங்கு நேராது எனவும் சொன்னான்.
அதற்கு முத்து, "அந்த அபாயம் விலங்கினால் அல்ல", இளவரசரே என்றான். 'விலங்கினால் அல்ல' என்பது தனக்கு 'விளங்கும்' படி விளக்கிச் சொல்லுமாறு கேட்டான். அதற்கு முத்து, காட்டினுள் இளவரசன் செல்லும்போது அதி பயங்கர மின்னல் இடியுடன் மழை போயிந்ததகவும்.. இளவரசன் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கவும், சிறிது நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து இளவரசன் மேல விழுந்து அவனது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியதை, தான் கண்டதாக சொன்னான்.
இதை கேட்டதும், இளவரசன் இடி போலச் சிரித்து.. "மழை வரும் முகாந்திரம் எதுவுமே இல்லை.. நீ சொல்வது வியப்பாக இருக்கிறது, எனது நேரத்தை வீணடிக்காதே.. நான் வில் வேட்டைக்கு செல்கிறேன்", எனக் கூறி போக முற்பட்டான். அதனை கேட்டுக் கொண்டிருந்த அரசனோ, இளவரசனை தடுத்து, அன்றையதினம் வேட்டைக்கு போகவேண்டாமெனவும் கட்டளையிட்டான்... 'அரச கட்டளை' மீற முடியுமோ, இளவரசனும் தனது வேட்டை பயணத்தை நிறுத்திக் கொண்டான்.
முத்து சொன்னதுபோலவே சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் காட்டில் கனமழை பொழிந்து, ஒரு பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக மறுநாள் தெரிய வந்தது. அதனை கேட்ட இளவரசன், தனது தந்தையான அரசரிடம், தனது உயிரைக் காத்த முத்துவிற்கு, பரிசளிக்கும்படி வேண்டினான். தந்தையும் முத்துவிற்கு பரிசளித்தது மட்டுமில்லாது, அவனை பணி நீக்கமும் செய்தான்.
'கதையை நன்கு கேட்டாயா விக்கிரமாதித்தனே ? தனது மகனின், நாட்டின் இளவரசனின் உயிரினை காத்த முத்துவை, பணி நீக்கம் செய்த அரசனின் செயல் சரிதானா ? சரியானால் என்ன காரணம்? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் நீ சொல்லவில்லையானால், உன் தலை சுக்கு நூறாகட்டும்', என்றது வேதாளம்.
வழக்கம் போல், விக்கிரமாதித்தன் சரியான பதிலை சொல்லவே, அவனது மௌனம் கலைந்த காரணத்தினால், வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறியது.
விக்கிரமாதித்தன் சொன்ன பதில் என்ன ? பின்னூட்டமாக சொல்லவும். எல்லோரும் முயற்சி செய்ய வசதியாக பின்னூட்டம் தற்போது வெளியிடமாட்டேன்....
34 Comments (கருத்துரைகள்)
:
வேலையை விட்டு முத்து ஏன் நீக்கப்பட்டான் என்றால், நாளை இளவரசன் மன்னனாக அரியணை ஏறினால், முத்துவை கேட்காமல் ராஜ்யபரிபாலனம் செய்ய மாட்டான். முத்துவை கேட்டுதான் வெளியேவே புறப்படுவான். அது ஒரு ராஜாங்கத்திற்கு ஆகாது. அதனால் அவனை வேலையை விட்டு நீக்கினான்.
இது சரியா தப்பா தெரியாது. தப்புன்னா அந்த வேதாளத்தோட அண்ணன் கிட்ட சொல்லுங்க. அது ஒத்துக்கும். ;-) ;-)
@ RVS - நான் எதிர்பார்க்காத பதில்..
நல்லா யோசிச்சு சொன்னாப்ல தெரியுது..
இதை விட obvious விடை ஒன்று இருக்கிறது.. முயற்சி செய்யவும்.
முத்து இரவு காவலாளியாச்சே. முத்து முந்தைய இரவு காவல் காக்காம தூங்குனதுனால தான கனவு வந்துருக்கு. பணி நேரத்துல தூங்குனதுனால முத்து பணி நீக்கம் செய்யப்பட்டார். கரெக்டா?
@ புவனேஸ்வரி ராமநாதன் - சரியாச் சொன்னீங்க..
கதை அருமை! நான் சின்ன வயதில் படித்தது போலவே உள்ளது!
அநேகமாக காவலாளி இரவில் தூங்கினான் அல்லவா காவல் காக்காமல் தூங்கியதால் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம்.
(பதில் எனக்கு தெரியாது அதனால் தலை வெடிக்காதுல்ல!)
காவலாளி போஸ்ட் தானே போச்சு,அவனுக்கு அமைச்சர் பதவியோ அந்தரங்க ஆலோசனைக்காரர் பதிவியோ கொடுத்திருப்பார்?
இவனை இப்படியே விட்டால் இனி ஒவ்வொரு முறையும் இவனது ஜோசியத்தையே நம்ப வேண்டி வரும்,ராஜ காரியங்கள் பாதிக்கப்படும்.இளவரசனுக்கு தன்னம்பிக்கை போய் மூட நம்பிக்கை வந்துடும்,எனவே...
புவனேஸ்வரி மேடம் கிட்ட நான் சொன்ன பதில் சரிதானா? ரைட்டு! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
@ எஸ்.கே -- அமாம்.. சிறுவயதில் படித்த நினைவுகள்.. மலர்கிறது..
உங்கள் தலை வெடிக்காது.. -- சரியான பதிலை தெரிந்திருந்தும் சொல்லாமல் இல்லையே.. சரியாக சொல்லிவிட்டீர்களே.
@ சி.பி.செந்தில்குமார் --
நீங்க சொன்ன அந்த மூட நம்பிக்கை.. நல்ல சிந்தனை.. அனேகமாக மூட நம்பிக்கை என்பது அனைவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் இருக்குமென நான் நம்புகிறேன்.
"பதவி உயர்வு" -- ஹா.. ஹா.. அப்படி இருந்தால் கதையிலேயே சொல்லி இருப்பேனே.. மறுபடி முயற்சி செய்யவும்.
வருகைக்கு நன்றி
@ சித்ரா -- அட அப்படியா.... நீங்க அவங்ககிட்ட சொன்னது எப்படி, எஸ்.கே க்கு தெரிந்தது..?
Duty நேரத்தில தூங்கலாமா..?
தப்பு தானே..
// அரண்மனை இரவுக் காவலாளி முத்து //
// முந்தைய இரவு தான் தூங்கும் பொது, கனவில், //
@ வெங்கட் -- How / எப்படி / ఎలా / कैसे கண்டு பிடிச்சீங்க..? கலக்கிட்டீங்க
என் பதிவுக்கு உங்கள் கமென்ட் பார்த்துவிட்டு நல்லா சிரித்தேன்.... மிக்க நன்றிங்க. :-)
ம்ம்.. பதில் தெரியுங்க.. வேலை நேரத்துல அவர் தூங்கியிருக்கார்.. அதனாலதான் கனவு வந்திருக்கு..
@ பதிவுலகில் பாபு -- ம்... ம் .. சரியான விடை..
//இரவுக் காவலாளி முத்து//
இரவு காவலாளி முத்து... பணியில் தூங்கியதால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அருண் பிரசாத் -- U R ✓
நைட் டியூட்டி பாக்காம தூங்கினா, டிஸ்மிஸ் பண்ணாம என்ன பண்றது?
@ பெயர் சொல்ல விருப்பமில்லை -- U too, are ✓
.........
@ ஸ்ரீராம் -- நீங்க ரொம்பவே சின்னதா புள்ளி புள்ளியா எழுதினதுனால சரியா புரியல..
என்கிட்டே இப்ப பூதக்கண்ணாடி(magnifying lens) கூட இல்லை.. அதனால பெரிசா, படிக்கறமாதிரி உங்க பதிலா எழுதுங்க, ப்ளீஸ்..
நன்றி.
//U R ✓ //
//U too, are ✓ //
என்னங்க இது? ✓ - எனக்கு வெறும் பொட்டி பொட்டியாதான் தெரியுது
✓ -- is a tick mark
"மலைடா..மலை அண்ணாமலை" ஸ்டைலு.
I used unicode or ASCII representation for 'tick' mark form the WEB SEARCH.
Sorry, it that's not displaced properly for you.
என்னதான் இரவுக் காவலாளி வேளை நேரத்துல தூங்கி கனவு கண்டான்னு வேலையை விட்டுத் தூக்கிட்டான்னு சொன்னாலும் அது ஏன் அவன் விடுமுறையா இருந்திருக்கக் கூடாது...! அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...!!
@ ஸ்ரீராம், நீங்க லேபர் யூனியன்ல மெம்பரா இருந்து, லேபருக்காக பல விதத்துல (உரிமைகள் உட்பட) உதவி செய்தீர்களோ ?
உங்க கேள்வி ரெம்ப ஞாயமாத்தான் இருக்குது.... இருந்தாலும் கேட்ட கேள்விக்கு பதில் வரலேன்ன, வேதாளம் எப்படி தப்பிக்கும்..பதில் வராமாதிரிதான கேக்கணும்..
இரவு காவலன் முத்து தூங்க கூடாது. தூக்கத்தில் கனவு கண்டேன் என்றால் ராஜா விடுவாரா அதனால்
பணிநீக்கம் செய்து விட்டார்.
அரசன் செய்தது சரியே.
"கோமதி"-'அரசு' சொன்னா சரிதான்.. வாழ்த்துக்கள்.
புவனேஸ்வரி ராமநாதன் sonnnadhu saridhan. naanum pudhidhai solvadharku ondrum ilai. duty time la thoongina yaardhan summa viduvanga. suppose duty timela muthu thoongitu irundhaa, andha timela thirudano or arasarai kolai seiya edhirigal yaaravadhu vandhaal enna seivadhu. adhanal arasar avarai pani neekkam seidhadhu sariye......
வாங்க தோசை.. சரியா சொல்லிட்டீங்க.. தங்கள் வருகைக்கு நன்றி.. அடிக்கடி வாங்க.. கருத்த சொல்லுங்க..
இன்ட்லில ஒட்டும் போடுங்க..
he slept on his duty
இதெல்லாம் இரு கோடுகள் படத்துலேயே கே பி சொல்லிட்டாருங்க!
@ hariharan -- yes, u r also ✓
@ kggouthaman அப்படியா?
தகவலுக்கு நன்றி. 'இருகோடுகள்' 87-88ல உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சென்னை தொலைக்காட்சியில் பார்த்தது.... இந்த செய்தி அதில் வந்ததாக எனக்கு ஞாபகமில்லை.. காரணம் என் கவனம் அப்படி இருந்ததோ என்னவோ. இந்த விஷயம் எனக்கு எப்படி தெரியுமென ஞாபகமில்லை.... சொந்த முயற்சியாக'விஷயத்தை' விக்கிரமாதித்தன், வேதாளத்திடம் புகுத்தி விட்டேன்.
தூக்கந்தேன் !!
தூக்கந்தேன்
Post a Comment