கடுப்பான நான்.. "போடா.. போயி படி.. குவாட்டேர்லி எக்ஸாமு முடியட்டும்.. அப்புறம் நீ வெளையாடலாம்.." அப்படீன்னேன்.
"போப்பா.. நாட்டு நடப்பே ஒனக்கு தெரியலை.. இன்னிக்குத்தான் எக்ஸாம் முடிஞ்சி நாளையிலேருந்து லீவு..". நேத்திக்கு அவன் (இன்றைய எக்சாமுக்கு) பிரிப்பர் பண்ணச்சே கேட்ட கேள்விக்குக் கூட இவ்ளோ ஃபாஸ்டா பதில் வரலை..
'சரி, ஒனக்குத்தான் 10 நாளு லீவாச்சே.. நா ஆஃபீஸு போனத்துக்கப்புறம் வெளையாடு' சொன்னேன், நான்.
சற்று நேரம் கழித்து.. அவன், 'அப்பா.. அப்பா... ரொம்ப போர் அடிக்குது'
ஒரு பேப்பர், பென்சில் கொடுத்து, ஒனக்கு புடிச்ச பழத்த வரைஞ்சு கிட்டு வா.
நிமிடத்தில் ஒரு வட்டம் போட்டு, ஆரஞ்சு கலர் (cryons) அடிச்சிட்ட வந்து சொன்னான்.. "அப்பா எனக்கு பிடிச்சா பழம் ஆரஞ்சு, இங்க பாரு"
என்னத்தான் அவனோட வரையும் தன்மைய நான் மனதார பாராட்டினாலும், அவன் என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது கண்டு.. கடுப்பும் வந்தது.
உடனே எனக்கு ஒரு ஐடியா வந்தது....
நான் அவனிடம் கொடுத்த படம், கீழே கொடுத்துள்ளேன்... மனதினுள் நினைத்தேன்... 'பய மாட்டினான்.. இப்போதைக்கு அவனால சால்வு பண்ண முடியாது.. நா நிம்மதியா வலைப்பதிவ நோன்டலாம்னு'
2 - 3 நிமிஷம் கூட முடியல..
அட நம்ம பையன் அதுக்குள்ள 'வோல்டு மேப்பு' ரெடி பண்ணிட்டான். அவன் காமிசச் படம் -- கீழே..
நா அசந்து போயி கேட்டேன்.. "எப்படிடா இவ்ளோ சீக்கிரம் செஞ்சி முடிச்சே ?".
அவன் சொன்னான், "அப்பா, 'மனுஷனை' சரியாக்கினா, தன்னால 'ஒலகம்' சரியாயிடும், இங்கிலீஷுல சொல்லனும்னா, Set the Man right, The world will be alright.".
'என்னடா சொல்லுற ?', நான் கேட்டேன்.
'அப்பா இதை அப்படியே திருப்பி பாரு, புரியும்', நம்ம பையன் சொன்னான்.
"அட.. அற்புதமா இருக்குதே.. எவ்வளவு உண்மை", படத்த திருப்பி பாத்த நான் சொன்னேன்.
நா கொடுத்த பஜிலுல, அப்படி என்னதான் பின்னாடி இருந்துச்சா..
இதுதான்..
டிஸ்கி : ஆரஞ்சு பழம் வரைக்கும் 'நடந்த உண்மை சம்பவம்' அதுக்கப்புறம்.. நா ஸ்கூலுல படிச்சப்ப 'வாத்தியார்' சொன்ன சின்னக் கதை.... சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி இருந்ததால சொந்த கற்பனையா இணைச்சு எழுதினேன்.
'இன்டலி' ல ஒட்டு போடுவீங்கதானே ?
12 Comments (கருத்துரைகள்)
:
அந்த ஆரஞ்சு பழத்தின் படமும் போட்டு இருக்கலாமே.... கதையும் கருத்தும் - அருமை.
kadhaiyum neenga solirukura karuthum rombha nalla irukku
nallathan irukku. payyantakitta system koduthuthu neenga aaniya paarunga
நன்றாக உள்ளது! நல்ல கற்பனை!
பெரிய விஷயங்கள் சிறிய வார்த்தைகளில் வெளிப்படுகின்றன...
மனுஷனை திருத்தினா எல்லாம் சரியாயிடும்ன்னு சொல்றீங்க... ஓ.கே ;-)
//டிஸ்கி : ஆரஞ்சு பழம் வரைக்கும் 'நடந்த உண்மை சம்பவம்' அதுக்கப்புறம்.. நா ஸ்கூலுல படிச்சப்ப 'வாத்தியார்' சொன்ன சின்னக் கதை.... சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி இருந்ததால சொந்த கற்பனையா இணைச்சு எழுதினேன்.//
உங்க நேர்மை பிடிச்சி இருக்கு....
டிஸ்கி போடாமலேயே இருந்திருக்கலாம்
//இந்த மாதம் மூன்றாவது சோமவாரத்தில் இரண்டாமாண்டு துவக்க விழா..?//
எனக்கு தெரியுமே!
அக்டோபர் 18, 2009 - முதல் பதிவு!
வாழ்த்துக்கள்
@ சித்ரா -- என்ன டீச்சர்.. 'ஆரஞ்சு படம்' கூட என்னோட கற்பனையோனு தோணுதா... (சும்மா தமாசுக்கு இப்படி கேக்குறேன்) வழக்கம்போல நன்றிகள்..
@ காயத்ரி, எல்கே. எஸ்கே. -- நல்லா இருக்குதா.... பாராட்டியமைக்கு நன்றி.
@ ஸ்ரீராம், ஆர். வீ. எஸ். -- சரியா சொன்னீங்கோ.. நன்றி.
@ டெர்ரர் -- ரொம்ப நன்றிங்கோ...
@ அருண் -- டிஸ்கி போட்டதுனாலதான், 'டேர்ரருக்கு' என்னைய -- என்னோட நேர்மைய பிடிச்சிருக்கு.....
@அருண் பிரசாத்
//டிஸ்கி போடாமலேயே இருந்திருக்கலாம்//
நாட்டுல ஒருத்தர நல்லவர இருக்க விட மாட்டியே!!!
சூப்பர். ஆக எல்லா வீட்லயும் இந்த computer sharing பிரச்னை இருக்கத்தான் செய்யுது போல.
Post a Comment