உலகக் கோப்பை கிரிக்கெட் - 2011 (4)

எனக்கு நல்லா நினைவு இருக்கு.. 1992 ல இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி, உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில்.. ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகள்.
முதலில் இந்தியா ஆடி.. 216 ரன்கள் மட்டுமே எடுத்தது..  ஸ்ரீகாந்த் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது.. ஆனா, ஜடேஜா, அசாருதீன், முக்கியமா, டெண்டுல்கர், கபில் தேவ் நல்லா ஆடி 200 க்கும் மேல ரன்களைச் சேர்த்தார்கள்.

பாகிஸ்தான் ஆமிர் ஷோஹில் செமையா விளையாடினாரு.. ஆனா டெண்டுல்கர் வீசிய பந்த அடிச்சு ஸ்ரீகாந்துக்கு கேட்சு கொடுத்து அவுட் ஆனாரு..  கபில் நல்லா பந்து வீசி.. இந்திய வெற்றிக்கு வழி வகுத்தார். 
ஒரு வழியா இந்திய பாகிஸ்தான 173 ரன்களில்  சுருட்டி வெற்றி பெற்றது..

அப்புறமா 1996 காலிறுதிப் போட்டி  -- பெங்களூருல நடந்தது. 
டெண்டுல்கர் & சித்து நல்ல ஆரம்ப ஆட்டம் தொடங்க.. அப்புறமா ஜடேஜா மட்டைய சுத்தின சுத்துல பந்து பறந்து. பறந்து.. இந்திய அணிக்கு ரன்கள் குவிஞ்சுது. ஜடேஜா பைன் லெக்குல அடிச்ச சிக்சர மறக்கவே முடியாது.

வக்கார் யூனுஸ், ஆக்விப் ஜாவித், முஷ்தாக் அஹமது விக்கெட்டு எடுத்தாலும் மூணு பேருமா சேர்ந்து 30 ஓவருல 190 ரன்கள தாரை வாத்தாங்க. . 287 என்ற வலுவான நிலையில இந்திய தனது ஆட்டத்தின் 50 ஓவரையும் முடிச்சுது.. 

தொடர்ந்து பாகிஸ்தா ஆட ஆரம்பிச்சாங்க . ரெண்டு வலுவான ஆரம்ப ஆட்டக் காரர்கள் நல்ல ஆரம்பம் தந்தாலும்.. 83 ரன்னுல சயீத் அன்வர் அவுட் ஆனதும். இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலை உருவானது. ஒரு பந்துல ஆமீர் ஷோஹைல் நான்கு ரன்கள் அடிச்சிட்டு பவுலர் பிரசாத்துக்கு பவுண்டரிய பேட்டால காட்டினாரு.. அடுத்த பந்துலேயே அவர போல்ட் அவுட் ஆக்கி.. அவருக்கு பெவிலியனுக்கு கைகாட்டி போகச் சொன்னாரு பிரசாத். இது தான் இந்த ஆட்டத்தின் ஹைலைட்

தகுந்த இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து வர.. இந்தியா வெற்றிப் பாதை நோக்கி முன்னேறியது. முக்கியமா வயசான மியந்தத் 64 பாலுல வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய வெற்றிக்கு துணை பண்ணினாரு..  

ஒரு வழியா இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.. 

மத்த ரெண்டு உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் நேருக்கு நேர் - போட்டிகளையும் நான் டி.வியில் கண்டு களித்திருந்தாலும்.. இங்கு சொல்லுமளவிற்கு ஞாபகம் இல்லை.  ( நீங்க தப்பிச்சீங்க..)

இப்ப.. இன்றைய (இந்திய) தினம்  :
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும்.. இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம்.. உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி.. இன்று (30 மார்ச் 2011 )

ம்ம்..  'விளையாட்டை' விளையாட்டாக மட்டுமே எடுத்துக் கொள்வோம்..

-- அமைதியும், மகிழ்சிசியும் நிலவட்டும்.. ஏனென்றால் உலக மக்கள் அனனவரும் ஒருவருக் கொருவர் 'நன்பேண்டா..'

டிஸ்கி : "இப்ப.. இன்றைய தினம்" என டைப்  அடிக்கும் பொது 'indraiya'  என்பதில் 'indaiya ' என தற்செயலாக டைப் அடித்ததால் அது, 'இந்திய' என வந்தது.
இன்று உண்மையில் 'இந்திய' தினமோ ?

======================================

சின்னப் பசங்க ஆனாலும்...

நம்ம பசங்களுக்கு இன்னிலேருந்து ஃபைனல் எக்ஸாம்..
நேத்து நைட்டு பசங்களுக்கு நல்லா பிரிபேர் பண்ணிக் கொடுத்து களைப்பா இருந்த தங்க்ஸ், ..  காலைல சமையல் வேலையில பிசியா இருந்ததால, பசங்கள குளிச்சுவிட்டு ரெடி பண்ணுறது நம்ம வேலையாகிடிச்சு. ஆமாங்க..  பசங்க படிக்குறது ரெண்டாவது, எல்.கே.ஜி.. தான். 

எல்.கே.ஜி படிக்குற பொண்ணுக்கு குளிச்சு விடச்சே.. சோப்பு நுரை மூக்குல போயிட்டுது  போல.. எரிச்சல்ல அழ ஆரம்பிச்சிட்ட.. ஒரு வழியா சமாதனம் பண்ணி குளிச்சு முடிச்சப்ப..

பொண்ணு : "ஏம்பா, சோப்புல மிளகாய் போடுவாங்களா ?"
நான் : "இல்லையே, ஏன் அப்படி கேக்குற ?"
பொண்ணு  : "அப்புறம் ஏன் எரியுது ?"  
நான் :  "!@#$%%^&*"
நான் :" அது வந்து..  ம்ம்... சோப்புல கெமிகல் போடுவாங்க அதான் எரியுது.."
பொண்ணு : "கெமிகல்னா  ?"
நான் : "ஆசிட் ஒரு கெமிகல்" 
பொண்ணு : "ஆசிட்னா என்ன ?"
நான் : "சரி விடு..  தண்ணி கூட ஒரு கெமிகல் தான் "
பொண்ணு : "போங்கப்பா.. தண்ணி கெமிகல் இல்லை.. அது பட்டா மூக்கு எரியாதே!"

இதக் காதுல வாங்கின தங்க்ஸ் : 'சால்ட் ஒரு கெமிகல்'
பொண்ணு : "ம்ம்.. இப்ப புரியுது.. சால்ட் கண்ணு, மூக்குல பட்டா எறியும்.."
நான் : (மனைவியிடம் ) -- அட.. எனக்குத் தோணலியே.. எப்படி பட்டுன்னு சொன்ன ?
தங்க்ஸ் : நீங்க அவ கேட்டப்ப பக்கெட்டுல மிச்சம்   இருந்த தண்ணிய பாத்திருப்பீங்க.., நா, இங்க  உப்பு டப்பாவா எடுத்தேன்.. அதான்.. 
நான்  (எனக்குள் ) : ஆசிட் சொன்ன நா, 'சால்ட்' சொல்லி இருக்கலாமே !

இப்ப எனக்கு புரியுது, அவ்வை ஷண்முகி படத்துல பேரு கேட்டப்ப எதுக்கு 'ப்ளீஸ் இன்செர்ட் ஒன் ரூபி காயின்'ன்னு சொன்னாருனு..  
==================================

உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் - (3)

வரவிருக்கின்ற மார்ச் 30 ம் தேதி நடைபெற உள்ள, உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தோற்காமல் இருக்கப் போவது யார் தெரியுமா ? நான் சொல்லும் பதில் கண்டிப்பாக நடக்கத்தான் போகிறது .... பதில் இப்பதிவின் கடைசியில் இருக்கிறது, பதிவை படித்துவிட்டு கடைசியில் பதிலைப் படிக்கவும்.

இந்திய-பாகிஸ்தான் மோதும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் இரு நாட்டு மக்களுக்கும் 'முக்கியமானதொன்றாக' ஆகிவிட்டது....  'கிரிக்கெட்' இது மட்டுமே வாழ்க்கை இல்லை, ஆட்டங்களில் வெற்றி தோல்வி ஒரு பகுதிதான். இப்படித்தான் 'விளையாட்டை' விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த முறையில் இந்த ஆட்டத்தினை அணுகினால், நாம் தேவையில்லாத டென்ஷனிலிருந்து தப்பலாம். விளையாடு வீர்கள் தங்கள் திறமையை காண்பிக்க விடுமே தவிர, தேவையில்லாத பயம் மற்றும் வாய்க்கொழுப்பை காண்பிக்கக் கூடாது.

பாகிஸ்தான் அணித் தலைவர், ஷாஹித் அஃப்ரீதி தேவையில்லாத வாய்ச் சவாடாலில் ஈடுபட்டுள்ளதாக நான் கருதுகிறேன். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய அடுத்தநாளே அஃப்ரீதி, 'சச்சின் தனது நூறாவது சதத்தை (டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் இரண்டையும் சேர்த்து) அடிப்பதற்கு அடுத்த தொடர் ஆட்டம் வரை காக்க வேண்டியதுதான். நாங்கள் எந்த இந்திய வீரரையும் அதிக ரன்கள் எடுக்க அனுமதிக்கப் போவதில்லை', என்று சொன்னதாக ஊடகம் வாயிலாக அறிந்தேன்.

மேலும் அவரும், இம்ரான்காணும், சொந்த ஆடுகளத்தில் (ஹோம் கிரவுண்டு)  விளையாடுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினால், இந்திய அணிக்குத்தான் டென்ஷன் அதிகமாக இருப்பதாகவும், தங்கள் அணியினருக்கு எந்த வித டென்ஷனும் இல்லையென்றும் சொன்னதாகவும் அறிந்தேன்.

இதே இந்த ஆட்டம் அவர்கள் (பாகிஸ்தான்) நாட்டு ஆடுகளத்தில் இருந்திருந்தால், மேற்சொன்ன வார்த்தையை வெளியிடாமல் 'சொந்த மண்ணில் விளையாடுவதால் எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கும்..' என்று பெருமையாக சொல்லியிருப்பார்கள்.

மேற்சொன்ன விஷயங்களை உற்று நோக்கினால் அவர்கள்தான் டென்ஷனில் இருப்பதாக எனக்குத் தெரிகிறது.
  • 'இந்த ஆட்டம் கடுமையாக இருக்கும்.. '
  • 'நாங்கள் எதிரணியினரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை..... '
  • 'நாங்கள் கவனமாக ஆடுவோம்.. '
  • 'நன்றாக ஆடுவோம்மென எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது..'
இதுபோன்று சொல்வதுதான் 'ஜென்டில் மென் கேம்' என்றழைக்கப்படும் 'கிரிக்கெட்' ஆடுபவருக்கு அழகு / பெருமை சேர்க்கும்.

பாகிஸ்தான் அணி இதுவரையில் உலகக்கோப்பை ஆட்டங்களில் நன்றாகத்தான் விளையாடி வருகிறது. ஆனாலும் அவர்கள் நியூசிலாந்திடம் தோற்ற அளவிற்கு நாம் தே.ஆப்ரிக்காவிடம் தோற்கவில்லை. அதாவது, லீக் ஆட்டங்களில், இந்திய அணி ஓரளவிற்கு சுமாராக விளையாடினாலும், அதிக வித்தியாசத்தில் தோற்கவில்லை.. 

சுருங்கச் சொன்னால்.. இந்திய அணி தற்போது பாகிஸ்தானிற்கு எந்த விதத்திலும் குறைந்ததாக எனக்குப் படவில்லை. ஹ்ம்ம்.. நமது அணி பொறுப்போடு விளையாடவல்லது  என்பது காலிறுதிப் போட்டியில் நன்கு வெளிப் பட்டதாக நான் நினைக்கிறேன்.

இது ஒரு விறு விருப்பான ஆட்டமாக வெளிப்படும் ...... அதுவரை..
"Let's keep our fingers crossed"

அன்றைய தினம் தோற்காமல் இருக்கப் போவது.. யார் ?
கண்டிப்பாக...
-------------
--------------
-------------
------------
------------
------------
------------
-------------
------------
------------
---------
------------
-----------
-----------
----------
-----------
----------
---------
-------
ஆஸ்திரேலியா, தெ.ஆப்ரிகா, வெ.இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை, நியுஜிலாந்து .. இவர்களில் யாரும் தோற்கப் போவதில்லை அன்றையதினம்.... ஹி.. ஹி.. ஹி..
========================================

உலகக் கோப்பை கிரிக்கெட் - (2)

ஹ்ம்ம். இப்பத்தான் இந்திய கிரிக்கெட் அணி மேல நம்பிக்கை வர்ற மாதிரி ஆடுறாங்க....

ஆஸ்திரேலியா என்னதான் தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றாலும்.. இப்ப இருக்குற அணி சற்று தரமானதாக இல்லை. இந்திய அணியின் பந்து  வீச்சு, ஃபீல்டிங் சரியா இல்லாததுனால.....  சற்று வலுவிழந்து (போல் காட்சியளிக்கும்) இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்திய அணி ஓரளவிற்கு சரியான முறையில் பந்து வீசியும், தடுக்கும் பணியும் நன்றாகச் செய்து ஆஸ்திரேலிய அணியினை 260 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.  இந்திய அணி, 10 - 15 ரன்களை தராமல் கட்டுப் படுத்தி இருக்கலாம்.. 43 ஓவரில் 199 மட்டுமே அடித்திருந்த ஆஸ்திரேலிய கடைசி 7 ஓவரில் ( பவர் ப்ளே இருக்கும் 5 ஓவர் உட்பட) 61 ரன்களை பெற்றது இந்திய அணியில் பலவீனத்தை காட்டுவதாக நான் நினைக்கிறேன்.

அணித் தலைவர் பொறுப்புடன் ஆட வேண்டும் என்பதற்கு ரிக்கி பாண்டிங் நேற்று உதாரணமாக இருந்தார். அதெப்படியோ தெரியவில்லை.. பொதுவாக ஃபார்மில் இருக்கும் வீரர்  இந்திய அணியுடன் சொபிக்காமலும்.. ஃபார்மில் இல்லாதொருவர் இந்திய அணியுடன் விளையாடும்போது ஜொலிப்பதும் நாம் பார்த்து வருவதுதான். அதுபோலவே பாண்டிங்கின் ஆட்டம் நேற்றிருந்தது. சதமடித்த அவருடைய  நேர்த்தியான ஆட்டத்தினை பல நாட்களுக்குப் பின்னர் பார்க்க முடிந்தது..

அடுத்து நமது இந்திய அணி ஆட்டம் பற்றி..
பவுலிங், ஃபீல்டிங் முறையில் முன்னேற்றம்.. இதேபோல சற்று கவனமாக இருந்தால் 20 முதல் 25 ரன்கள் வரையில் எதிரணியினர் பெற முடியாமல்  கட்டுக்குள் வைக்கலாம்.
"A run saved is a Run Scored."
முதல் பத்து ஓவரில் அதிக ரன்கள் கொடுக்காமல் ஒரு விக்கெட்டையும் சாய்த்து (வாட்சன் விக்கெட்) இந்திய அணி பந்து வீச்சு நல்ல ஆரம்பம். ஆனால் அடுத்த பத்து ஓவர்களில் 60 ரன்களை கொடுத்தது ஏனோ நினைவிற்கு வருகிறது. பவர் பிளேவில் 35 ரன்களுக்கு மேலே கொடுக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும் (மிஞ்சிப் போனால் 40 ) 

இந்திய பேட்டிங் ....  நம்ப முடியவில்லை.. ஆரம்பம் முதலே..  நிதானம், பொறுப்பு, கவனம் வெளிப்பட்டது. டெண்டுல்கர் அமைத்த அடித்தளம் மிகவும் பாராட்டப்பட வல்லது. அவரின் அனுபவம் நன்கு வெளிப்பட்டது. சேவாக் சற்று பயந்தது போலவே பேட்டிங் செய்ததாக நான் நினைக்கிறேன். அவர் தனது பாணியில் விளையாடலாம் என்பது எனது கருத்து. ஒவ்வொரு பார்ட்னர்ஷிப்பும் சொல்லும்படியாக இருந்தது, ரன் அவுட்டுகளை தவித்திருக்கலாம்.  தன்னை அணியில் சேர்த்தது சரியான செயல்தான் என்பதை சுரேஷ் ரைனா நிரூபித்திருக்கிறார். யுவராஜுடன் அவர் சேர்ந்து இக்காட்டான நேரத்தில் நன்றாக விளையாடி வெற்றியினை பெற வழி வகுத்தார். யுவராஜின் மற்றுமொரு பொறுப்பான சிறப்பான ஆட்டம்.  இதுவரை விளையாடிய ஏழு ஆட்டங்களில் நான்கு 'Man of the Match', யுவராஜிற்கு.. அதில் ஐந்து மேட்சுகள் இந்திய வெற்றி கண்டுள்ளது.. ஒன்றில் மட்டுமே தோல்வி. மற்றொன்று 'டை'

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்... 
கவனம் தேவை... கரடு முரடான கடினமான பாதை எதிர் வருகிறது... (பாகிஸ்தானுடன் அரை இறுதி ஆட்டம்)  -- கவனித்து செல்லவும்..

முதல் 'எம்' கடந்தாயிற்று.. (மொட்டேரா)..  இன்னும் இரண்டு 'எம்'கள் (மொஹாலி, மும்பை) கடந்தாக வேண்டும், உலக சாம்பியன் ஆவதற்கு.. .. 

வாழ்த்துக்கள் இந்திய அணியினர் வரும் ஆட்டங்களில் வெற்றி பெற..

நாடுகளுக்கிடையே ஒருநாள் ஆட்டத்தில்(ODI) 18000 ஓட்டங்களை கடந்த டெண்டுல்கருக்கு ஒரு சிறப்பு சபாஷ்.. 

டிஸ்கி : நேற்று விறுவிறுப்பான டென்ஷனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்தப் பதிவு..  தோற்றிருந்தால்.. வேறு விதமாக (திட்டித்தான்) பதிவு வந்திருக்கும்.. பதிவெழுதாம இருக்க மாட்டோமில்ல !

மொக்கை(ராசா) மூக்கு - செல்வா'ஸ் ஸ்பெஷல்

மொக்கை மூக்கு
நண்பர் செல்வா ஒரு முறை தீராத சளித் தொந்தரவினால் அவதிப்பட்டபோது அவரை சந்திக்க நேர்ந்தது. நான் அவரிடம், 'சளி' -  மூக்கு, தொண்டை சம்பந்தப் பட்டது, நீங்கள் இ.என்.டி (ENT ) மருத்துவரிடம் சென்று மருத்துவ உதவி பெறுங்கள் எனச் சொன்னேன்.

இ.என்.டி (ENT ).. ஓஹோ.. 'N' -என்பது 'நோஸ்' மூக்கையும், 'T ' என்பது 'த்ரோட்' தொண்டையையும்.. குறிக்கிறது.. அப்ப 'E' என்பது கண்களைதானே குறிக்கிறது என்றார். நான் அவரிடம் 'E ' என்பது , 'Ear ', காதினைக் குறிப்பதாகச் சொன்னேன்.  அவர் ஒப்புக்கொள்ள வில்லை. மூக்கிற்குப் பக்கத்தில் கண்கள்தான் இருக்குறது. காது சற்று தொலைவில் உள்ளது. எனவே 'ENT ' மருத்துவர் 'கண், மூக்கு, தொண்டை' மருத்துவ நிபுணர்தான் என்று அடித்துப் (!) பேசினார். அவரை சமாதானம் செய்து.. மருத்தவரை அணுகி முதலில் மருத்துவ உதவி பெறுமாறும்.. பின்னர் இது பற்றி பேசி ஒரு முடிவிற்கு வரலாம் என்றேன்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் நண்பர் செல்வாவை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றேன்.. அவர் தற்போது சளித் தொல்லையிலிருந்து சற்று நிவாரணம் பெற்றிருப்பதாகவும் சொன்னார். நான் மெதுவாக ENT என்பதில் வரும் 'E ' என்பது காதினை குறிப்பதாகும் என ஆரம்பித்த உடனேயே, என்னை நிறுத்தி அவர் சொன்ன தகவல் இருக்கிறதே.. ..   ம்ம்.. எல்லாம் என்னோட நேரம்.. இப்படிலாம் ஒரு ஆள் எனக்கு நண்பனா கிடைத்ததை நினைத்து நினைத்து..   நோ.. நோ.. நா ரோம்ப பாவம்..  இதுக்கு மேல வேணாம்..  வேணவே வேணாம்.. 

அவரு என்ன சொன்னாரா... ?

செல்வா : இங்கப் பாருங்க.. ENT டாக்டர் ப்ரிஸ்க்ரைப் பண்ண  மருந்துல இதுவும் ஒண்ணு.. இதோட பேரு 'நாஸிவிஷன்'. 'நாஸி'ன்னா  மூக்கு.. 'விஷன்'ன்னா  பார்வை.. அதாவது கண்ணுக்கும் மூக்கும் இருக்குற சம்பந்தத்த நா, இதுக்கு மேல உங்களுக்கு விளக்கணுமா என்ன ?

P.S.V(பக்கத்திலிருந்த எங்கள் இன்னொரு நண்பர் செல்வாவிடம் ) :  "நல்லா பாருங்க செல்வா , அது நாசிவியான். நாசிவிஷன் அல்ல"

செல்வா :  "போங்க சார், கம்பெனி காரங்க,  ஸ்பெல்லிங் தப்பா எழுதியிருக்காங்க. அவங்களுக்கு தான் நீங்க அட்வைஸ் பண்ணனும்" என்றாரே பார்க்கலாம், எனக்கு காது கேட்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.


டிஸ்கி : நன்றி  பி.எஸ்.வி.

============================


கதம்பமாலை ( Mixed Garland / Evening)

இப்படியும் அலுவலகர்கள் இருக்கிறார்கள் :
சென்ற மாதம் எனது பிராட் பேன்ட் பில்லில் நான் எதிர்பாரா வண்ணம், அதிகத் தொகை வந்தது. எனக்கு ஆச்சரியம்.. பிப்ரவரி மாதம் 28 நாட்கள் மட்டுமே.. அதிலும் நான் நான்கு நாட்கள் வீட்டில் இல்லை. மேலும், நான் எனது போன்-கால்கள் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளை அடிக்கடி அப்டட் செய்பவன். அதனாலேயே இந்த பில்லில் ஏதோ குறைபாடு இருப்பதாக எனக்குத் தோன்றியது. போன் செய்து கேட்டேன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில். அவர்களும் இந்த முறை எனது பில்லில் ஏதோ தவறு நேர்ந்து விட்டதாகவும்.. ஓரிரு நாட்களில் சரி செய்து விட்டு எனக்குத் தகவல் தருவதாகவும் சொன்னார். 

சொன்னதோடு இருக்காமல், அதனை சரி செய்தவுடன் வீட்டிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்கள். இப்படியும் அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றியும். 




ரயில்வேத் துறையின் செயல்பாடுகள் (முன்பதிவு அலுவலகம்) :
நான் மூன்று-நான்கு வருடங்களாக, ரயில் பயணங்களுக்கு ஆன்-லயனில் முன் பதிவு செய்து வருகிறேன். கூட்டம் குழப்ப மில்லாமல், வீட்டிலிருந்த படியே முபதிவு செய்வது வசதிதான். இருந்தாலும்..  நேரடியாக ஒரே ரயில் இல்லாத இரண்டு இடங்களுக்கிடையே, ஒரு ரயில் பிடித்து  இடைப்பட்ட ஊர் வரை சென்று அங்கிருந்து மற்றொரு ரயில் பிடித்து செல்வதற்கு ஒரே டிக்கெட்- தொலைநோக்கு கட்டணமுறை ( telescopic fare ) பெறுவது இயலாததால் முன்பதிவு நிலையத்திற்கு சென்றேன்.

முன்பெல்லாம் முன்பதிவு மையத்திற்கு சென்றால், எட்டு வரிசை இருந்தால்.. நாம் எதில் சேருகிறோமோ அது மிகவும் மெதுவாக முன்னேறும்.. (மர்பி விதி). நமக்கும் பின்னால் வந்தவர்கள் வேறு வரிசையில் சேர்ந்து நமக்கு முன்னரே முன்பதிவு செய்து விட்டு செல்வதை நம்மில் பலரும் அனுபவித்திருக்கலாம். இதைத்தான் நேரம் என்று நினைத்து நம்மையே நாம் தேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால்..

இப்போது அங்கு வரிசை முறை சிறப்பானதாக இருக்கிறது. கால் வலிக்க நிற்க வேண்டிய அவசியமில்லை. முதலில் விண்ணப் படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து ஒரு கவுண்ட்டரில் வரிசை(டோக்கன் முறை) எண் பெறவேண்டும். பின்னர் இருக்கும் நாற்காலியில் (இடம் கிடைத்தால்) அமர்ந்திருக்கலாம். இருக்கும் எல்லா கவுண்டர்களிலும் தற்போதைய மூன்று எண்கள் டிஸ்ப்ளே செய்த படியே இருக்கும், அதனோடு ஒவ்வொரு கவுண்ட்டரில் வரிசை எண் மாறும் பொது, அறிவிப்பும் செய்யப்படும். குளிரூட்டப் பட்டுள்ள அறையில் நிம்மதியாக ஓய்வெடுத்த படியே நமது முறை வரும் வரையில் இருக்கலாம்.  அதே அறையின் பக்கத்திலேயே சிற்றுண்டி / காபியும் காசு கொடுத்து வரலாம். பக்கத்திலேய பே அண்ட் யூஸ் குளியல் மற்றும் கழிவறைகளும் இருக்கிறது. நேரமானாலும் அளுப்பு தோன்றவில்லை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்பது இந்த முறையில் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இதனை செயல் படுத்தும் நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும்.

இன்றைய இந்திய வெஸ்ட்-இண்டீஸ் ஆட்டம் :
வழக்கம் போல பேட்டிங் பவர் பிளேயில்  இந்திய அணி சோபிக்கவில்லை. 1990களில் டெண்டுல்கர் மட்டுமே அடித்து ஓட்டங்கள் சேர்த்த நிலை மாறி மேலும் இரண்டு மூன்று நல்ல ஆட்டக்காரர்கள் கிடைத்தாலும், இந்த உலகக் கோப்பையில் இதுவரை முதல் மூன்று நான்கு ஆட்டக்காரர்களைத் தவிர மற்றவர்கள் சொதப்புவதை பார்க்கையில் இந்தியா அடுத்த நிலை ஆட்டங்களில் வெற்றி பெறுமா என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. சரியான பவுலர்கள் இல்லை...

தோனியின் கணிப்புகள் சரியாக பயனளிக்க மறுக்கிறதோ ? இன்றைய ஆட்டத்தில் யுவராஜ் செஞ்சுரி அடித்திருக்கிறார்....  என்ன செய்ய ? இந்திய அணியின் வெற்றி திறமையைவிட அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கிறதோ ?

ஒரு வேளை, இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தால் காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட வேண்டுமென்ற பயத்தில், இந்திய அணி தோற்க முயலுகிறதோ ?

ஒரு ஆறுதல்.. அம்பயர் அவுட் கொடுக்காவிட்டாலும், டெண்டுல்கர் அவுட் என அவராகவே வெளியேறியது, பாராட்டுதலுக்குரியது.
=====================================

ஜோக்ஸ் (பேத்தல்) டைம்



சின்ன வயசுல காதால் (அபிஷ்டு.. 'காதல்' இல்லை 'காதால்') கேட்ட சில ஜோக்குகள்..

கணவர் : (மனைவியிடம்) நா இங்க கழுதை மாதிரி கத்தி உன்னை கூப்பிடுகிட்டு இருக்கேன்.. நீ அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?
மனைவி : உங்களுக்குக்காக பேப்பர தேடிக்கிட்டு இருக்கேன்..
-----------------------------------------
ஒருவர் : ஒரு தடவை கேட்டா, உங்களுக்கு மறக்காதா ?
மற்றவர் : எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு  'தோல்'காதுதான்.
-----------------------------------------------
ஒருவர் : எண்டா, நேத்திக்கு குன்னக்குடி வைத்தியநாதன் வயலின், கேட்டியா ?
மற்றவர் : கேட்டாமட்டும், தந்துடுவாரா என்ன ?
-------------------------------
முதலாமவர் : சிட்டி பாபு வீணை வாசிக்கச்சே இந்த ஆள் காட்டி விரலை யூஸ் பண்ண மாட்டாரு தெரியுமா ?
மற்றவர் : ஏன் ?
முதலாமவர் : காரணம்.. இது என்னோட விரல்.
மற்றவர் : வீணையே இல்லாம ரமணி கச்சேரி பண்ணுவாரு தெரியுமா ?
முதலாமவர் : எப்படி ?
மற்றவர் : அவரு தான் புல்லாங்குழல் வித்வான் ஆச்சே.

கொசுறு செய்தி (1 ) : முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு வீணையும் வாசிக்கத் தெரியுமோ ? கிரேட். நெட்டிலிருந்து கிடைத்த படம் ( நன்றி - கூகிள் இமேஜெஸ்).
-----------------------------
இதே பாணில நா என்னோட பிரண்டு கிட்ட 1987 உலகக் கோப்பை கிரிக்கெட் சீசனுல கேட்டேன்
நான் : ரவி சாஸ்திரி பவுலிங் போடும் பொது இந்த விரலை (எனது வலது கை நடு விரலைக் காட்டி) யூஸ் பண்ண மாட்டாரு தெரியுமா ?
எனது நண்பர் : ஹி.. ஹி.. இதுதான் உன்னோட விரலாச்சே !
நான் : அதில்லை, 'அவரு லெஃப்ட் ஹான்ட் பவுலர்'.

கேள்வி : ஹர்பஜன் சிங் மற்றும் மகாத்மா காந்தி இருவரிடையே இருக்கும் ஒற்றுமை ?
பதில் : ரெண்டுபேருமே ஸ்பின்னர்ஸ்.. 
------------------------------
நன்றி விக்கிபீடியா
கொசுறு செய்தி (2 ) :
அதல்லாம் சரி.. முன்னாள் பாகிஸ்தான் காப்டன், வக்கார் யூனுஸ் பவுலிங் போடும்போது சுண்டு விரலை பயன் படுத்தமாட்டாரு ஏன் தெரியுமா ?

ஏன்னா.. அவருக்கு  சுண்டு விரலே (இடது கை) கெடையாது.. வெட்டி எடுத்துட்டாங்க..
(நன்றி : http://en.wikipedia.org/wiki/Waqar_Younis section titled 'Cricket and coaching career' ).

கொசுறுக்கு கொசுறு : வக்கார் யூனுஸ் எனக்கு பிடித்த பவுலர்களில் ஒருவர். (மைன்ட் வாய்ஸ் : ஆமா, இது ரொம்ப முக்கியம் ?)
==============================

கிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி?) வழி.

ஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல  ? (அட.. ஃபீல் பன்னினோம்பா .)

டெண்டுல்கர் செஞ்சுரி அடிச்சும் நாம தோத்துப் போயிட்டோம். டெண்டுல்கர் 100 க்கு மேல அடிச்சாலும் இந்திய 13 மேட்சுல இதுவரைக்கும் தோத்திருக்காம்(தோல்வி). நம்ம க்ரிக்-இன்ஃபோ புள்ளி-குரு (ஸ்டாட்ஸ் -குரு) சொல்லுறாரு.

அதுக்காக டெண்டுல்கர் செஞ்சுரி அடிக்க வேணாம்னு சொல்லுறது நல்லா இல்லை. யோசிச்சேன்.. யோசிச்சேன்.. 

டெண்டுல்கர் செஞ்சுரி அடிக்கணும்.. ஆனா இந்தியாவும் ஜெயிக்கணும்..  ம்ம் என்ன பண்ணலாம்..?

நம்ம யுவராஜ் அரை சதம் போட்டு இந்தியா இது வரைக்கும் பெரும்பாலான மேட்ச்சு  ஜெயிச்சிருக்கு   (இது கூட ஸ்டாட்ஸ் -குரு சொன்னதுதான்). (வெற்றி)

ம்ம்.. ஆனாலும் பாருங்க.. யுவராஜ் அரை சதம் போட்டும், டெண்டுல்கர் செஞ்சுரி அடிச்சதால இந்திய-இங்கிலாந்து (27-02 -2011) மேச்சு 'டை' (வெற்றி-தோல்வியின்றி) ஆகிடிச்சு.
டெண்டுல்கர் 100 + யுவராஜ் 50 = தோல்வி + வெற்றி  = 'டை'
 (மைன்ட் வாய்ஸ் : எலேய் இது எல்லாருக்கும் நல்லாவே தெரியும்..)

சடார்னு எனக்கு ஒரு ஐடியா..? இப்படி நடந்தா என்னா ?

ஒரே மேட்சுல டெண்டுல்கர் சதம் அடிச்சும், யுவராஜ் ரெண்டு அரை சதம் கிராஸ் பண்ணா, அதாங்க செஞ்சுரி போட்டா,  இந்தியாவுக்கு வெற்றிதான ?

100 + 50 + 50 = தோல்வி + வெற்றி + வெற்றி = வெற்றி ?
அட நம்ம மேதமடிக்ஸ் நாலேட்ஜு இந்திய டீம் ஜெயிக்குறதுக்குக் கூட உதவும் போல இருக்கே ? வாட்ட-ன  ஐடியா !

டிஸ்கி : யாருப்பா அது.. அதுக்குள்ளே தோனிக்கு டயல் பண்றது ? நம்ம வெங்கட்டா ?
==================================

உலகக் கோப்பை கிரிக்கெட் 2011 - (1)

இந்தியா அணி பற்றி :
எதிர்பார்த்ததை விட மோசமாக விளையாடுகிறது இந்திய அணி. பேட்டிங் மட்டுமே வெற்றியை ஈட்டுத் தராது. நல்ல பந்து வீச்சும், களத்- தடுப்பு முறையும் வேண்டும். இது கண்டிப்பாக அவர்களுக்குத தெரிந்திருக்கும் என்று நம்புவோம்.

இது வரை சற்று சுலமான அணிகளையே எதிர் கொண்டது இந்திய அணி.. எனவே தற்போதைய நிலவரப் படி புள்ளி மேஜையில் முதலாவதாக இருக்கிறது. அடுத்தச் சுற்றுக்கு செல்வதற்கு மட்டுமே இது உதவலாம்.

அடுத்து வரும்  ஆட்டங்களில் மிகவும் நன்றாக விளையாடினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். ( இதுக்கு மேல, நா என்னாத்த சொல்லுறது.)

மத்தபடி தோணியோட அதிர்ஷ்டம்னு ஒரு ஐட்டம் இருக்கு.. பாக்கலாம்  

கப்பு 
மெல்லிய கால்கள் - பெண்ணோ ?

டிவிட்டரில் ரசித்தது..
பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டத்தில் இரண்டு முறை டைலரின் கேட்சை(நன்றி : யூடியூப் லிங்க்) பிடிக்கத் தவறிய பாகிஸ்தான் விக்கெட் கீபர் கம்ரான் அக்மல் பற்றி டிவிட்டரில் வந்தது....  , நிஜிலாந்து, கடைசி நன்கு ஓவரில் 92 ரன்கள் அடிக்க 'டைலர்' உதவினார்.
(சுவை மாறாமல் இருக்க ஆங்கிலத்தில் தருகிறேன்)
  1. Behind every successful Batsman, there is Kamran Akmal
  2. What is in common between Michel Jackson & Kamran Akmal  : Both of them wearing Gloves for no reason
  3. Kamran Akmal's Offer @ pickup point : Where shall I drop you ?
  4. If Kamran akmal chooses to be wicket keeper, the batsmen is assured to keep his wicket .
  5.  Do u know why Kamran Akmal went by 'WALK' from Stadium to Hotel (after the match) ?     ----- Because, he failed to catch the bus.
இலங்கை அணியின் வருத்தம் :
இலங்கை அணி நியூசிலாந்தை - மும்பை மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய, பங்களாதேஷ் நாடுகள் மட்டும் முதல் சுற்று ஆட்டங்களை அவரவர்கள் நாட்டில் சொந்த மண்ணில் ஆடும் பொது தாங்கள் மட்டும் ஏன் ஒரு ஆட்டத்தினை வேறு மண்ணில் ஆடவேண்டும் என்று இலங்கை அணித் தலைவர் குறை கூறி தனது வருத்தத்தினை தெரிவித்தாராம்.

Ref : 
  1. http://www.islandcricket.lk/news/srilankacricket/99120306/sri-lankan-captain-upset-over-playing-world-cup-match-in-india
  2. http://cricblitz.blogspot.com/2011/03/2011-cricket-world-cup-sl-to-play-nzl.html
  3. http://www.rediff.com/cricket/report/world-cup-2011-sangakkara-disappointed-about-playing-kiwis-in-mumbai/20110305.htm
  4. http://mybatball.com/?q=node/114197
அதிலும் முதலாவது வலைதளத்தில் SHREEE என்பவர் எழுதிய பின்னூட்டம் சூப்பர்.. இந்தியாவோட காலிறுதில இலங்கை ஆடுற நிலை வேண்டாம்னு சொல்லுறாரு. பயப்படுறாரு, நம்மளப் பாத்து...

பின்வரும் உண்மைகள் அவர்கள் கண்ணை மறைத்து விட்டது ஏனோ தெரியவில்லை. 
  • இந்தியா பங்களாதேஷை இந்திய மண்ணில் எதிர் கொள்ள வில்லை.
  • இந்த அட்டவணை பல மாதங்களுக்கு முன்னரே வெளிவந்துவிட்டது. இலங்கை அணித் தலைவர், இப்போது ஏன் குறை சொல்கிறார் ?
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு புள்ளிகள் மட்டுமே கிடைத்தது (ஒரு வேலை மழை பெய்யாமல் இருந்திருந்தால்  ?). மேலும் பாகிஸ்தானோடு தோற்று விட்டது. இப்போது புள்ளிப் பட்டியலில் தேவையான நிலை பெறவேண்டிய கட்டாயம், நியூசிலாந்தை வீழ்த்தவேண்டும்.

எல்லாருமே சந்தர்ப்பம் பாத்து பேசுறாங்கப்பா..  ம்ம்ம்ம்.. அது எப்படி தப்பாகும் ?

டிஸ்கி : கிரிக்கெட்டப் பத்தி எழுதி ஒப்பேத்த வேண்டாம்னு இருந்தேன்.. உசுப்பேத்தி உட்டானுங்கப்பா !!
====================================

பெயர்க்குறிப்பு (தொடர்பதிவு )

முதலில் என்னை இந்த தொடர் பதிர்விற்கு அழைத்த ஆர்.வி.எஸ் மற்றும் ஆர்.கோபி இருவருக்கும்  நன்றிகள் (சமத்தா, சமமா பிரிச்சிக்கோணும்,  ஆமா) .

என்னைப் பார்த்து 'பெயர்காரணம் சொல்லு' என்றால், நான் எனது பிள்ளைகளுக்கு வைத்த பெயர் காரணத்தை தான் சொல்ல முடியும்.  எனக்கு என் இந்தப் பெயர் வைத்தார்கள் என்று எனது பெற்றோரைத் தான் கேட்கவேண்டும்.

இருந்தாலும் அவை(வலைதள) அடக்கம் என்று ஒற்று இருக்கிறதே. அதன் பொருட்டு, எனக்கு இந்தப் பெயர் வந்த காரணத்தையும், இந்தப் பெயரின் அர்த்தத்தையும், சின்ன வயதில் எதிரிகள் (கிண்டல் செஞ்சா, அவன் நண்பனா?) மூலம் எனக்கு கிடைத்த பட்டப் பெயர் - ஒரு சிறு குறிப்பும் இந்தப் பதிவில் தருகிறேன். 

மாதவன் - இதுவே எனது முதல் பெயர். நான் பிறந்த பொது பிறப்புப் பதிவு (Registration of Birth) கட்டாயமாக இருந்தாலும், பிறப்புச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப் படவில்லை. எனவே அந்தச் சான்றிழ் மூலம் எனது பெயரை நான் ஆதாரமாக காட்ட முடியாவிட்டாலும் எனது பள்ளிப் பதிவில் இந்த பெயரே தரப் பட்டது. எனவே இதுதான் எனது அதிகாரபூர்வப் பெயராகும். (அதிகாரம் பண்ணறது நானில்லீங்கோ)
 
புதுக்கோட்டை மாவட்டத்தில், இருக்கும் ஊரான திருக்கோஷ்டியூரில் இறைவனை எனது தந்தை தரிசித்துவிட்டு வந்த சிறிது நாட்களில் நான் பிறந்ததால், இப்பெயர் எனக்கு வைத்ததாக எனது அன்னையார் சொல்லியிருக்கிறார்.

எனது பெயருக்கு, வலைதளத்தின் மூலம் தெரிந்து கொண்ட அர்த்தங்கள்..

இவ்ளோ பிரபலமா?
இந்தப் பெயர், ஆயிரம் நாமங்களை உடைய பெருமானின்  பெயர்களுள் ஒன்றாகும். 'மா' என்றால் 'அறிவு / ஞானம்'. 'மா'தவன் அதன் அரசர்  (லார்ட்) ஆவார்.  
 

'மாதவன்'  - 'நற்பேறு / சந்தர்ப்பம்' என்பதன் இறைவியின் கணவர்.
(He is known as Madhav meaning the Husband of Goddess of fortune, Sri Lakshmi.)

வசந்தகாலத்தின் கடவுள். (God of Spring)

இருந்தாலும் நான் நினைக்கும் மற்றொரு அர்த்தம் 
மாதவன் = மாதவத்தோன்,
  • மா - பெரிய
  • தவத்தோன் - தவம் செய்யும் வலிமையைப் பெற்றவன்
கடும் தவத்தினை செய்யவல்ல திறமையை கொண்டவன்  --
(ஹி.. ஹி.. திறமை இருக்கு.. ஆனா அப்படிலாம் செய்ஞ்சு ஒரேயடியா பெரியாளாக வேண்டாமுன்னு பாக்குறேன்..)
 
ஒட்டுகேட்கும் வல்லவர் : பள்ளிப் பருவத்தில் வெவ்வேறு குழுக்களால (குரூப்புதான்) இருந்தப்ப, எதிரிக் குழுவில் நடக்கும் ஆலோசனை / திட்டங்களை தெரிந்து கொண்டு எங்கள் குழு நண்பர்களுக்கு தெருவிக்க வேண்டிய பொறுப்பில் (பொறுப்பான புல்லை நானு) நான் இருந்த போது அதனை தெரிந்து கொண்ட எதிரணியினர் என்னைப் பற்றி இவ்வாறு பாடினார்கள்.  
உள்ளமது உள்ளவரை,
ஒட்டுகேட்கும் வல்லவரை,
எங்களிடம் செரேன்றால்
அந்தக்குழு என்னாகும்.. ?
('ஒளிவிளக்கு' திரைப் படத்தில் வரும்  'ஆண்டவனே உன் பாதங்களை..' பாடலில் கடைசி வரிகளாக வரும் மெட்டில்.. )

பெயரைத் தவிர போட்டோவுல இருப்பவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.

தொடர அழைக்கிறேன் 
  1. சிரிப்பு போலீசு
  2. எங்கள் - ஸ்ரீராம்
  3. எஸ்.கே
===================================== 

புத்திசாலி(யின்) அனுபவங்கள்.

நண்பர் எஸ்.கே ஆங்கில ஜோக்கு ஒன்றை மொழி பெயர்த்து சொல்லக் கேட்டேன். அது...

ஒரு பெட்ரோல் பேங்குக்கு போனப்ப அங்க ஒரு போர்டை பார்த்தேன். அதில் “இங்கே செல்போன் உபயோகிக்காதீர்” அப்படின்னு எழுதியிருந்தது. உடனே என் செல்ஃபோனை எடுத்து எல்லோருக்கும் போன் பண்ணி எனக்கு இப்ப போன்  பண்ணாதீங்கன்னு சொல்லிட்டேன்!
- புத்திசாலி ஆளுதான்..

ஹி.. ஹி.. அவரு வேணா வெறும் 'புத்திசாலியா' இருக்கலாம்.. நாதான் ஆதிலேருந்து அதி-புத்திசாலியா இருக்கேனே. எப்படியா ? சொல்லுறேன், கேளுங்க (படிங்க)..

சாம்பிள் - 1  
 நா கூட பெட்ரோல் பங்கு போனப்ப, கன்னத்துல அரிச்சுது. கையில இருந்த செல்போன வெச்சி கன்னத்த வருடி அரிப்ப போக்கலாம்னு நெனைச்சேன். “இங்கே செல்போன் உபயோகிக்காதீர்” -- அங்க போர்டுல இருந்த அறிவிப்ப பாத்த உடனே,  அரிச்சாலும் பரவாயில்ல போர்டுல எழுதி இருக்கிறத மீற வேணாம்னு  பொறுத்துக் கிட்டேன்.
(அடப்பாவி கூகிள் மொழியாக்க பக்கத்துல 'மீற வேணாம்'னு  டைப் அடிச்சா  'மீரா வேணாம்'னு காமிக்குது, என்ன வில்லங்கத்தனம்... )

சாம்பிள் - 2  
ஒரு முறை எங்கள் வீட்டு டி.வியின் ரிமோட் கண்ட்ரோல் வேலை செய்யவில்லை (ஸ்ட்ரைக்  பண்ணிச்சு ). நா அத சரி செய்ய, ஓபன் பண்ணி, என்னால எவ்ளோ முடிஞ்சதோ அதுவரைக்கும் நோண்டி எடுத்திட்டேன்.

அப்புறமா அத செட் பண்ணிட்டு பட்டனை அமுக்கினேன். ம் ஹூம், அதோட ஸ்ட்ரைக் வாபஸ் ஆகலை. வீட்டுல எல்லாரும் என்னைய கேவலாமா ஒரு லுக் உட்டாங்க.

இதுக்குலாம் நா வருத்தப் படலை. நான்தான் மேதாவி ஆச்சே(!) அந்த  ரிமோட் கண்ட்ரோல வெச்சு வால்யூம் / ச்செனல மாத்திக் காட்டுறதா ச்செலன்ஜ்   செஞ்சேன். அவங்களாம் என்னைய நம்பவே இல்லை.

ஏற்கனவே ஆன் செய்ஞ்சு இருந்த டி.வி கிட்ட போயி, டி.வி பொட்டில இருக்குற பொத்தானை (வால்யூம், ச்செனேல்) கையில இருந்த ரிமோட் வெச்சி அமுக்கி வால்யூம்/ ச்செனல சொன்ன படி மாத்திக் காமிச்சேன்..

--- நானேதான்.. அதாங்க அதி-புத்திசாலி
 ---------------------
என்னோட நம்பர்களும்.. நண்பர்களும்  புத்திசாலிதான்
ஜஸ்ட் ஒரு சாம்பிளுக்கு நமது அமைச்சர் மங்குனியோட  ஐட்டத்த எடுத்து விடுறேன் பாருங்க.
அவரு ஒரு பெட்ரோல் பேங்குக்கு போனப்ப அங்க ஒரு போர்டை பார்த்தாரு. அதில் “இங்கே செல்போன் உபயோகிக்காதீர்” அப்படின்னு எழுதியிருந்தது. உடனே தன்னோட என் செல்ஃபோனை எடுத்து அதுல இருந்த 'செல்ல' கழட்டிட்டு வெறும் போன தான் உபயோகிச்சாரு(!).. ரூல்ஸ மதிக்கிற ஆளாச்சே அவரு.

இன்னும் சாம்பிள் வேணும்னா  செல்வா கதைகளைப் படிச்சா தெளிவா தெரியும்.. 
=============================================
                                                                  

நீங்கள் 18+ ஆனவரா ?

எல்லாருக்கு தெரியும் 18 + க்கு ஒரு தனி மவுசுதான். தேர்தலுக்கு ஒட்டு போடும் வாக்காளர் ஆகலாம். ஓட்டுனர் உரிமம் பெறலாம். செய்யும் செயலுக்கு சட்டப் படி நீங்களே பொறுப்பு, வேறு எவரும் உங்கள்  விருப்பத்தில் (சட்டப்படி) தலையிட முடியாது. இன்னும் பல அனுகூலங்கள் / வசதிகள் பெறலாம். நீங்கள் 18 +  குழுவில் சேர்ந்து விட்டீர்களா?' என்பதை தெரிந்துகொள்ள ஒரு சுலபமான வழி இருக்கிறது...   அது பற்றி .... கீழே.

முதலில் நமது தேசப் பிதா, மகாத்மா காந்தி பிறந்து இன்றுடன் (மார்ச் -  2 , 2011 ) எத்துனை
  • நாட்கள் ,
  • வாரங்கள், 
  • மாசங்கள்,
  • வருடங்கள்,
ஆகிவிட்டது ? என்பதை தெரிந்து கொள்வோம்.

அவர் பிறந்து
  • 51,650  நாட்கள் 
  • 7378 வாரங்கள்
  • 1697 மாசங்கள்
  • 141 வருடங்கள் ஆகிவிட்டது இன்றுடன்.
சரி.. இப்ப நம்ம விஷயத்துக்கு வருவோம்...

  • நீங்கள் 18 + குழுவில் இணைந்து விட்டீர்களா ?
  • இணைவதற்கு இன்னும் எத்தனை நாட்கள், வருடங்கள், வாரங்கள் இருக்கிறது ?
  • அட நீங்கள் பிறந்து இன்றுடன் எத்தனை நாட்கள், வாரங்கள், மாசங்கள், வருடங்கள் ஆகிவிட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா ?
  • உங்கள் தாய்/தந்தை பிறந்து எத்தனை நாட்களுக்குப் பின்னர் நீங்கள் பிறந்தீர்கள்?
  • நீங்கள் பிறந்து எத்தனை நாட்களுக்கு பின் உங்கள் மகன்/மகள் பிறந்தனர் ?
  • அட.. நீங்கள் பள்ளி/கல்லூரி படிப்பை முடித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன ?
  • வரவிருக்கும் ஒரு நாள் இன்றிலிருந்து(அல்லது வேறு ஏதாவது நாள் முதல்) எத்துனை நாட்களுக்குப் பின்னர் வரும் ?
மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது
மேலும் பல விஷயங்கள் இந்த வலைதளத்தில் இருக்கிறது. உங்களுக்கு பயன்படும் என்ற நோக்கில் இங்கு பகிர்ந்தேன். நன்றி.

டிஸ்கி :
  1. காலம் பொன் போன்றது, எனவே அதனைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்)
  2. 18 + டைட்டில் போட்டா, விசிடிங் எகிறுது அதான்...
=====================================