பேருல, தோலுல..

" 'Paes' &'Black' Win Aus Open Mixed Doubles "   -- http://www.ibnlive.com  14:00 Hrs, 31st Jan 2010.

Congratulations to the winners.

நம்ம  கமெண்டு.......
"Black" - ஒருத்தருக்கு பேருல, மற்றவருக்கு தோலுல.. ( என்ன பொருத்தம்டா டோய் ! )


வெட்டியதாலும், செத்ததாலும் சாகாத நாயகி

"வெட்டியதால் சாகவில்லை, வெட்டாவிட்டால் செத்திருப்பேன் ;
செத்ததால் சாகவில்லை, சாகாவிட்டால் செத்திருப்பேன் !"

புரியலியா... ?

அமாவாசை இரவு, கும்மிருட்டு, வானம் மெலிதாக தூரி கொண்டு இருந்தது. சற்று முன்னர் தான் இடி, மின்னலுடன் கூடிய பெருமழை பெய்து ஓய்ந்தது. நடக்கக் கூட கடினமாக இருந்தது நமது நாயகனுக்கு.  தனது நாயகியை காணப்போகும் ஆவலில் வெகு வேகமாக நடந்து நடந்து.. குறுப்பிட்ட இடத்தை அடைந்து, அங்கு அவளைக் காணாமல் திகைப்படைந்தான். சொன்ன நேரத்திற்கு, குறிப்பிட்ட இடத்திற்கு சரியாக வரும் பழக்கத்தினை கொண்டவள் அல்லவா என எண்ணியவாறு காத்திருந்தான் . நேரம் செல்ல செல்ல, பயம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. நாயகி வரும் வழி சற்று காட்டுப்பகுதி என்பதால் அவனது பயத்திற்கு ஒரு அர்த்தமிருக்கத்தான் செய்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் சற்று தூரத்தில் ஒரு பெண் நடந்து வருகிறாள் என்பதனை, கொலுசின் ஓசை தெருவித்தது. 'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!' என்பது கொலுசு அணிந்த பெண்களுக்கும் பொருந்தும் தானே. (ஒப்புமை,  உருவத்தில் அல்ல. பெண்களே, தவறாக எண்ண வேண்டாம்) கொலுசு ஓசை கேட்டு நம் நாயகன் ஆறுதல் அடைந்தான் என சொல்லவும் வேண்டுமோ?  அருகாமையில் வந்து அவளை அடையாளம் கண்டு, அதே சமயத்தில் அவளைக் காணாமல் தான் அடைந்த வேதனையை நினைத்து, அவளைப் பார்த்து 'ஏன், தாமதமாக வந்தாய் ?, நேரம் கடந்து சென்றதால், நான் பட்ட கவலையை நீ அறியமாட்டாயா?' என்று கேட்டான்.

நமது நாயகியோ 'இலக்கிய நயம்' மிகுந்தவள். தனது தாமதத்திற்கான காரணத்தை, கவிதை நடையிலே பின்வருமாறு சொன்னாள்
"வெட்டியதால் சாகவில்லை, வெட்டாவிட்டால் செத்திருப்பேன் ;
செத்ததால் சாகவில்லை, சாகாவிட்டால் செத்திருப்பேன் !"

நம்மைப்போலவே, அவனுக்கும் புரியவில்லை.. நாயகியோ "அவனிடம், நான் வந்த வழி வழக்கமானதாக  இருந்தாலும், மழை பெய்ததால், வரும் வழியில் திடீரென 'மின்னல்' வெட்டியதால் (மின்னியதால்) அதன் ஒளியின் மூலம், ஒரு புதை குழி இருப்பதை கண்டு, அதனுள் விழாமல் எனது உயிர் தப்பியது. (மின்னல்) வெட்டாவிட்டால், இறந்திருப்பேன் அல்லவா?" என்றாள்.


















மேலும்,  தொடர்ந்து பேசிய நாயகி, நாயகனிடம் "பின்னர் வரும் வழியில் கால்களுக்கிடையே சிக்கிக்கொண்ட நீளமான பொருளை கயிறு என நினைத்து, குனிந்து கைகளினால் எடுத்துப் பார்த்தால், அது கயிறு அல்ல, பாம்பு என்பதனை அறிந்தேன். நல்லவேளை, அது செத்த பாம்பு.. எனவே எனது உயிர் தப்பியது. அது மட்டும் சாகாவிட்டால், நான் செத்திருப்பேன் அல்லவா?" என்றாள்.
"இதெப்படி இருக்கு..?"

பின்குறிப்பு : மூலப் பொருள், நான்கைந்து வரிகளாக, ஆனந்த விகடன் இதழில்(அனேகமாக 1984 - 85 ல் , இலவச இணைப்பு புத்தகமாக -- அதாவது இலவச யுக்தி 25 வருடத்திற்கு முன்னரே இருந்தது), வெளிவந்தது. அதனை எனது (சொந்த) நடையில் இங்கே கொடுத்துள்ளேன்  (மாறுபட்ட, அசுத்தமான காப்பி --- நன்றி ஆ.வி )

எனக்குத் தெரிந்த சட்டம்!



"Man stages suicide Drama - Keeps Cops Guessing For 3 Hours From Top Of Tower"

HEIGHT OF TENSION: Thirtyfive-year-old Victor Jebaraj climbed atop a 65-foot-tall cellphone tower at Vijayanagar in Velachery threatening to commit suicide; His wife arrived on the spot and requests him to climb down;  A crowd gathered as the ordeal lastted for three hours; He finally abandoned his attempt and is arrested"
[A News item appeared in (Courtesy) Times of India (chennai edition) dt. 22nd Jan 2009.]

தற்கொலை செய்ய முயன்று வெற்றியடையவில்லை என்றால் இ.பி.கோ. சட்டத்தின் படி தண்டனை உண்டாம். இதணைக் கூட சரியாக செய்யத் தெரியவில்லை என்றா?

இதனை வேறு கோணத்திலும் பார்க்கலாம். ஒருவன் மற்றோருவனை மரணமடையச் செய்தால் ( அல்லது அவ்வாறு முயன்றாலும் ) அவருக்குத்   தண்டனை வழங்குவது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் ஒருவர் தன்னையே மரணமடையச் செய்வதற்கு முயன்றால் அது எப்படி குற்றம்? 'என் உயிர்', 'என் வாழ்க்கை'.  வாழ்வதா, வேண்டாமா? எனது விருப்பம்', என்று ஒருவன் நினைக்கலாம். அனவது வாழ்க்கையை முடித்துக் கொள்ள(கொல்ல) அவனுக்கு உரிமை இல்லையா? அவனால் உருவாக்கப்பட்ட அவன் வாரிசை கூட  கொல்ல சட்டத்தில் இடமில்லை. ஏனென்றால் அது வேறு ஓர் உயிர்.

எப்பொழுது அவனால் உருவாக்கப்பட்ட ஒரு  உயிரைக் கொல்ல அவனுக்கு அனுமதி இல்லையோ, பிறகு எப்படி மற்றொருவரால் (அவனது தாய், தந்தையாரால்) உருவாக்கப்பட்ட உயிரை (அவனையே) கொல்ல சட்டம் இடம் தரும்?

இதுதான் எனது தீர்ப்பும் கூட.
'நாட்டாமை, தீர்ப்ப மாத்து' ன்னு யாரோ அங்க கூவுற மாதிரி இருக்கு..  எந்த கொம்பன் வந்தாலும், இந்த தீர்ப்ப நா மாத்த மாட்டேன்,  ஹி..  ஹி..  இவ்ளோதான் என்னாலே கொல்ல சாரி சொல்ல முடியுமுங்கோ..





பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!


தீயவைகள் ஒழிந்து
இன்பங்கள் மலர்ந்து
நல்வாழ்க்கை  தொடர்ந்து
பொங்கட்டும்  பொங்கல் !
பொங்கலோ  பொங்கல் !!

மனம்கனிந்த பொங்கல்
நல் வாழ்த்துக்கள்..

முழுமையான பொங்கல் எது?
மஞ்சள், இஞ்சி, கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை மாலைபோல் கோர்த்து  அணியப்பெற்ற புதுப்பானையில் புத்தம் புதிய அரிசி  (சமீபத்தில் அறுவடை செய்து நெல் நீக்கப்பட்ட அரிசி) பருப்பு, பசு நெய், நல்லதொரு முந்திரி , திராக்ஷை, பாகு வெல்லம் இவையனைத்தும் சரியான அளவில் இட்டு, நமது எதிர்காலம் நல்ல பல விஷயங்களுடன் பொங்கு பொங்கு என்று  பொங்கட்டும் என்பதற்கு அடையாளமாக பொங்கி வழியும் பொங்கல்.

Alexander the Great !


மாவீரன் அலேக்சாண்டரைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். பல ஊர்களை/நாடுகளைக் கடந்து வெற்றிகளை மலை போல் குவித்து தனக்கென ஒரு சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்டவர். போரில் வெற்றி பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகுமா ?

ஆனாலும்  அவரைப் பற்றிய ஒரு செய்தி கீழே தரப்பட்டுள்ளது. அது, நமது வாழ்க்கைக்குப் பயன் பெரும் என நான் நினைத்ததால், இந்த பதிவு.
படத்தின் மீது கிளிக் செய்து பெரியதாக்கி படிக்கவும். (இடநெருக்கடியால், படம் சின்னதாகிவிட்டது.)

Team Work - கூட்டு (கூடி செய்யும்) வேலை

தலைப்பை நினைத்தாலே ஒரு தெம்பு வருகிறது. எந்த ஒரு வேலையிலும் பலதரப்பட்ட நுணுக்கங்கள், சிரமங்கள் இருக்கலாம். ஒருவர் போல மற்றொருவர் சிந்திப்பதில்லை. பலதரப்பட்ட மக்களுக்கு, பலவித சிந்தனை இருப்பது இயற்கை அல்லவா? எனவே எந்த ஒரு வேலையானாலும், பலரின் ஆலோசனைகளை அறிந்து, அவற்றுள் சிறந்தவற்றை செயல் படுத்தினால் அச்செயலில் வெற்றி பெறுவது எளிதாகுமல்லவா?

பலர் சேர்ந்து ஒரு செயலில் ஈடுபடுவதே டீம் வொர்க் (team work) என்பது. அதனை நம் இனிய தமிழில் 'கூட்டு முயற்சி' எனச் சொல்லலாமென நான் நினைக்கிறேன். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பது நம்மில் பலருக்கு தெரிந்த பழமொழி. பின்வரும் படம், அதனை நன்கு வெளிப்படுத்துகிறது. இப்படம் சிரிக்க மற்றும் சிந்திக்கவும் வைக்கிறதல்லவா? மூவர் சேர்ந்து செய்தால், நன்மை மூவருக்கும் கிடைக்கிறது என்பதை நன்கு உணர்த்துகிறது. இவ்வாறு நடைமுறையில் ஒரு பள்ளத்தை தாண்டலாமா எனக் கேட்காமல், அந்த படம் உணர்த்தும் பொருளை நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளலாமே !






எப்போதோ கேட்ட செய்திகள் !

செய்தி --1
ஒரு புலவரின் மகன்,  அவரிடம், "அப்பா, காலில் முள் குத்திவிட்டது,  என்ன செய்ய? என்றானாம். அதற்கு அப்புலவரோ,

"பத்து ரத புத்திரனின், மித்திரனின், சத்துருவின், பத்தினியின் காலேடுத்துத் தேய்."

புரியலியா?

விடை தெரியாத கேள்விகள் - II


  
 





நாள் முழுதும் அலுவலகப்பணி அதிகமிருந்ததால், மிகவும் களைத்துப்போய்,   வரவேற்பறையில் இளைப்பாரிகொண்டிருந்த வேளையில், துள்ளிக் குதித்து வீட்டினுள் வந்தான்  என் 5 வயது செல்லக் குட்டி (மகன்).

மதிப்பற்ற(பற்றிய) தகவல்


<------ இது என்ன தெரியுமா? 500 ரூபாய் நோட்டில் காந்தியின் காதின் வலது புறத்தில் இருப்பது. 'RBI 500'. சாதாரணமாக இது தெரியாது. லென்சின் உதவியுடன்
பார்த்தால் தெரியும். எனது டிஜிட்டல் காமெராவின் மூலமாக, நான் எடுத்த ஓர் படம் இது.

எரிவாயு உருளை




உங்களுக்குத்
தெரியுமா?

அனேகமாக எல்லோர் வீடுகளிலும் சமையல் எரிவாயு பயன்படுத்தப் படுகிறது. அரசே இலவசமாக விநியோகித்து வருகிற வேளையில் அந்த உலோக உருளையை பற்றிய ஒரு செய்தி இதோ.